ipl: csk அணியில் புதிய வீரர்கள் வாங்கப்பட்ட நிலையில் எந்த அளவுக்கு மகிழ்ச்சி உள்ளதோ அதே அளவிற்கு குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள்
ஐ பி எல் 2025 ம் ஆண்டுக்கான மெகா ஏலம் நடைபெற்று முடிந்தது. இந்த மெகா ஏலத்தில் நாம் எதிர்பார்த்தது மற்றும் எதிர்பாராத பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. மேலும் இதில் csk அணி தற்போது பலமான அணியியை கட்டமைத்துள்ளது. இந்த மெகா ஏலத்தில் சிறப்பான வீரர்களை தேர்வு செய்துள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்துள்ளனர்.
csk அணியில் சிறந்த வீரர்களை தேர்வு செய்துள்ளது. ஆனாலும் இந்த அணயில் குழப்பம் நிலவி வருவதாக கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. அதில் முதலில் தொடக்க வீரராக ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் கான்வே களமிறங்குவார். மாற்று தொடக்க வீரராக ரச்சின் ரவீந்திரா களமிறங்குவார்.
அவரை தொடர்ந்து புதிதாக வாங்கப்பட்ட வீரர் ராகுல் திருபாத்தி அடுத்து தீபக் ஹூடா,சிவம் துபே மற்றும் சாம் கரன் ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்கப்படும் நிலையில் இன்னும் எம் எஸ் தோனி மற்றும் ஜடேஜா என முக்கிய வீரர்கள் உள்ளனர்.
பொதுவாக csk அணியை பொறுத்தவரை அணியில் வாங்கப்படும் வீரர்கள் ஃபார்ம் அவுட்டில் இருந்தால் கூட csk அணிக்கு வந்த பிறகு சிறப்பாக விளையாடுவது வழக்கம். உதாரணமாக சாதாரண சிவம் துபே தற்போது csk அணிக்கு வந்த பின் சிக்சர் துபே வாக மாறியுள்ளார். மேலும் ரஹானே,உத்தப்பா ஆகிய நிறைய வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.
csk அணியில் பொறுத்தவரை பவுலிங் மிகவும் வலிமையான வரிசையை அமைத்துள்ளது. மேலும் இந்த பேட்டிங் வரிசையும் வலிமையாக தான் உள்ளது. இந்நிலையில் புதிய வீரர்களான திரிப்பாத்தி மற்றும் தீபக் ஹூடா போன்ற வீரர்கள் அவ்வளவாக ஹிட்டிங் செய்யாத வீரர்கள். அதுமட்டுமல்லாமல் எம் எஸ் தோனி மற்றும் ஜடேஜா எந்த ஃபார்மில் இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் அந்த வரிசையில் யார் களமிறக்க படுவார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.