என்ன செய்தும் உள்ளங்கையின் நிறத்தை மட்டும் மாற்ற முடியவில்லை என்பது பல பெண்களின் குமுறலாக இருக்கிறது.முகம் அழகாக நல்ல நிறத்தில் இருந்தாலும் சிலருக்கு உள்ளங்கையின் நிறம் கருமையாக சொரசொரன்னு காணப்படும்.
பாத்திரம் கழுவுதல்,துணி துவைத்தல் போன்ற பல காரணங்களால் பெண்களின் உள்ளங்கை நிறம் மாறுகிறது.சிலருக்கு உள்ளங்கையில் வெடிப்பு,சொரசொரப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
முக அழகை மேம்படுத்த அக்கறை செலுத்தும் நாம் உள்ளங்கையை மிருதுவாகவும் நல்ல நிறத்துடனும் வைத்துக் கொள்ள வேண்டும்.
உள்ளங்கையை அழகாக வைக்கும் சில சுலபமான வழிமுறைகள்:
1)வேப்பிலையை அரைத்து தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து உள்ளங்கையில் தடவி காயவிட்டு கைகளை கழுவ வேண்டும்.இவ்வாறு தினமும் வேலைகள் முடிந்த பின்னர் செய்து வந்தால் உள்ளங்கை மிருதுவாகவும்,நல்ல நிறத்துடனும் இருக்கும்.
2)ஒரு தேக்கரண்டி அரிசி மாவில் ஒன்றரை தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து உள்ளங்கையில் தடவி மசாஜ் செய்து வந்தால் கருமை நீங்கும்.
3)சாதம் வடித்த கஞ்சியில் சந்தனத் தூள் சேர்த்து குழைத்து உள்ளங்கையில் பூசி வந்தால் கருமை நீங்கும்.
4)சாதம் வடித்த கஞ்சியில் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கைகளை அதில் ஊறவைத்து பின்னர் வாஷ் செய்யவும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் உள்ளங்கை கருமை நீங்கும்.
5)பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்து உள்ளங்கையில் தடவி ஸ்க்ரப் செய்து வந்தால் கருமை நீங்கும்.
6)கற்றாழை ஜெல்லில் மஞ்சள் தூள் சேர்த்து குழைத்து உள்ளங்கையில் பூசி பிறகு வாஷ் செய்தால் கருமை நிறம் மாறும்.
7)ரோஜா இதழ் பொடியை இரண்டு தேக்கரண்டி தயிரில் கலந்து உள்ளங்கைகளில் அப்ளை செய்து வந்தால் கருமை நீங்கும்.