மூன்று நாட்களாக எரிக்காமல் வைத்திருந்த பிணம்!பிணத்தை எரிக்க வழி விடாத உறவினர்கள்!

Photo of author

By Rupa

மூன்று நாட்களாக எரிக்காமல் வைத்திருந்த பிணம்!பிணத்தை எரிக்க வழி விடாத உறவினர்கள்!

தமிழ்நாட்டில் பல கிராமங்களில் வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளில் இருந்து கொண்டுதான் வருகிறது. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வெள்ளை கொல்லை கிராமத்தில் நடந்த நிகழ்வு அனைவரையும் கோபமுற செய்கிறது. ஏனென்றால் வாழும்போது தான் சிலருக்கு நிம்மதி கிடைக்காது. இறந்த பிறகாவது அவர்களுக்கு செய்யவேண்டிய சடங்குகளை முழுமையாக செய்து அவர்களை மனநிறைவுடன் அனுப்பவேண்டும். அதுதான் காலகாலமாக நம் தமிழர்கள் பாரம்பரியமாக செய்து வருகின்றனர்.

அந்த வகையில் வெள்ளை கொள்ளை கிராமத்தை சேர்ந்த முத்தையா மகன் துரைசாமி இவருக்கு வயது 43. விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு மரணமடைந்தார். இதனையடுத்து அவரது அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் துக்கம் விசாரித்தனர். அதன்பின் அவரை அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லும் போது பக்கத்து வீட்டு உறவினர்கள் எங்கள் பாதை வழியே எடுத்துச் செல்லக்கூடாது என்று அவருடன் வாக்குவாதம் செய்து சண்டையிட்டனர்.

இந்தச் சண்டையானது இரண்டு நாட்களை கடந்து இன்றும் நடந்து வந்துள்ளது. அது வரை இறந்தவரின் உடலை எடுக்க முடியவில்லை. அதனால் இறந்தவரின் உறவினர்கள் அனைவரும் அம்மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க சென்றனர். அதன்பின் உடனடியாக போலீசார் மற்றும் அரசு ஊழியர்கள் விரைந்து வந்து இறந்தவரின் பக்கத்து வீட்டு உறவினர்களை சமாதானம் செய்து எடுத்து செல்ல அனுமதி வாங்கி கொடுத்தனர்.

ஆனால் இறந்தவரின் வீட்டில் ஒரு சில உறவினர்கள் மட்டுமே இருந்தனர். மற்றவர்கள் அனைவரும் இரு நாட்கள் ஆன நிலையில் அவர்களின் ஊர்களுக்குச் சென்று விட்டனர். இந்த கிராமத்தில் சாலை வசதிகள் இல்லாததால் இவ்வாறு இம்மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அரசாங்கம் இம்மாதிரியான கிராமங்களுக்கு சாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் விதமாக இருக்கும்.