சிறுவனுக்கு விஷம் வைத்து கொலை!! கொடூர ஆசிரியருக்கு தூக்கு தண்டனை!! 

0
119

சிறுவனுக்கு விஷம் வைத்து கொலை!! கொடூர ஆசிரியருக்கு தூக்கு தண்டனை!! 

சிறுவனுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து கொலை செய்த ஆசிரியருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஜியான்சுவோ நகரில் மழலையர் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு வான் யுன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது வகுப்பில் 25 மாணவர்கள் படித்து வந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் வான் தன்னிடம் படித்த மாணவர்களுக்கு விஷத்தன்மை கொண்ட சோடியம் நைட்ரேட் கலந்த உணவை சாப்பிடுவதற்கு கொடுத்துள்ளார். இதை சாப்பிட்டதும் அந்த சிறுவர்களுக்கு திடீரென கடுமையான வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அங்கு சிறுவர்கள் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விஷம் கலந்த உணவை கொடுத்ததற்காக வான் யுன்னை போலீசார் கைது செய்தனர். இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அந்த நாட்டின் கோர்ட் அந்த ஆசிரியருக்கு 9 மாதம் சிறு தண்டனை வழங்கியிருந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர்களில் ஒருவர் 10 மாதங்கள் கழித்து உயிரிழந்துள்ளார். மேலும் வான் தனது கணவரையும் விஷம் வைத்துக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது.

இதன் காரணமாக சிறுவர்களுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கு மற்றும் கணவனையும் கொலை செய்த வழக்கு ஆகியவற்றிற்காக அந்த ஆசிரியருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உடனடியாக நிறைவேற்றப்பட்டது.

 

Previous articleமுகத்தில் துளைகள் உள்ளதா? அதை சரிசெய்வதற்கு சில எளிமையான வழிமுறைகள் இதோ!!
Next articleமீண்டும் தமிழகத்தில் மின்தடை!! பராமரிப்பு பணி அதிர்ச்சியில் மக்கள்!!