பட்ட பகலில் இளம்பெண்ணை கடத்திச்சென்ற வாலிபர்! ஈரோட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்!

Photo of author

By Rupa

பட்டபகலில் இளம்பெண்ணை கடத்திச்சென்ற வாலிபர்! ஈரோட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்!

ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி அவர் பெற்றோருடன் வசித்து வந்தார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அஸ்வின் ஜார்ஜ் தனது சித்தி வீட்டில் தங்கி வேலைக்கு சென்றான்.

பல நாட்களாக பார்த்து வந்துள்ளான். ஒரு நாள் அந்த சிறுமியிடம் உன்னை விரும்புகிறேன் என்று கூறியுள்ளான். திடிரென்று ஒரு நாள் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தையை கூறி தன்னுடன் அழைத்து சென்றான்.

அவருடைய பெற்றோர் சிறுமியை காணவில்லை என்று ,உறவினர்கள் மற்றும் தெரிந்தவர் வீடு என பல இடங்களில் தேடினார்கள். எங்கும் தேடியும் கிடைக்காத நிலையில் பெற்றோர் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

அவர்கள் அளித்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து அச்சிறுமியை தேட தொடங்கினார்கள். தேடப்பட்ட நிலையில் அந்த சிறுமி பஸ் நிலையத்தில் ஒரு வாலிபருடன் நின்று கொண்டிருந்தாள் என்ற தகவல் கிடைத்தது.

தகவல் கிடைத்த உடனே காவல் அதிகாரிகள் பேருந்து நிலையத்திற்கு புறப்பட்டார்கள். போலீசார் அங்கு சென்று பார்க்கும் போது இருவரும் பேருந்திற்காக காத்திருந்தார்கள் என தெரியப்பட்டது.

அங்கு சென்ற காவல்துறையினர் உடனே இருவரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சிறுமியுடன் இருந்தவர் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கூடலூர் பகுதியில் வசித்து வந்த அஸ்வின் ஜார்ஜ் என்பவர் என தெரியவந்தது.

22 வயதான இவர் காரமடையில் உள்ள சித்தி வீட்டில் நூற்பாலைக்கு வேலை செய்து வந்தார். அஸ்வின் ஜார்ஜ் வேலைக்கு சென்று வந்த போது அந்த சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு போலீசார் அஸ்வின் ஜார்ஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்கள். பின்னர் அந்த சிறுமியை அவருடைய பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தார்கள்.