கொச்சுவேலி-நிலம்பூர் ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கழிவறை கதவு என நினைத்து ஓடும் ரயிலின் கதவை திறந்த சிறுவன் ஒருவன் தவறி விழுந்து உயிர் இழந்துள்ளான்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டம் மாம்பாடு பகுதியை சேர்ந்தவர் சித்திக். இவர் நேற்று குடும்பத்துடன் திருவனந்தபுரத்தில் இருந்து மலப்புறத்திற்கு கொச்சுவேலி-நிலம்பூர் ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவருடைய 10 வயது மகன் முஹம்மது இஷான் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியாகி உள்ளான்.
இஷான் நள்ளிரவு 12.30 மணியளவில் கழிவறை செல்வதாக கூறி சென்று இருக்கிறான்.நீண்ட நேரம் ஆயினும் அவனை காணாததால் அவனை கூட்டி வர சென்று இருக்கின்றனர். அப்போது ரயிலின் கதவு திறந்து இருந்து இருக்கின்றது மேலும் மகனையும் காணவில்லை என்றவுடன் ரயிலின் செயினை பிடித்து இழுத்து நிறுத்தி இருக்கின்றனர்.
தண்டவாளத்தில் பணிபுரிபவர்களை அழைத்து தேட சொல்லிய போது இசான் ஒரு கல்வெட்டின் அருகில் கண்டெடுத்து இருக்கிறார்கள்.உடனடியாக மீது மருத்துவமனைக்கு கொன்று சென்ற பொது இசான் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு இசானின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.