உங்களுக்கு குறை இரத்தப் பிரச்சனை இருந்தால் அவற்றை குணப்படுத்திக் கொள்ள முருங்கை கீரையில் சுவையான சூப் செய்து பருகலாம்.
முருங்கையில் இருக்கின்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறை இரத்த அழுத்தத்தை குணப்படுத்த உதவுகிறது.முருங்கையில் இரும்பு,வைட்டமின்கள்,ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்து காணப்படுகிறது.இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)முருங்கை கீரை – ஒரு கப்
2)சீரகம் – கால் தேக்கரண்டி
3)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
4)வெள்ளைப்பூண்டு பல் – இரண்டு
5)சின்ன வெங்காயம் – இரண்டு
6)மிளகு – நான்கு
7)உப்பு – தேவையான அளவு
8)தக்காளி – ஒன்று
9)தண்ணீர் – ஒன்றரை கப்
செய்முறை விளக்கம்:-
முதலில் பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு கைப்பிடி அளவு முருங்கை கீரையை அதில் போடுங்கள்.அடுத்து கால் தேக்கரண்டி சீரகம்,இரண்டு பல் வெள்ளைப்பூண்டு சேர்க்க வேண்டும்.
பின்னர் மிளகு,சின்ன வெங்காயம் ஆகியவற்றை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து தக்காளி பழம் ஒன்றை நறுக்கி அதில் போட வேண்டும்.
பின்னர் மஞ்சள் தூளை அதில் போட்டு கொதிக்க வையுங்கள்.இந்த முருங்கை கீரை பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் சிறிதளவு உப்பு கலந்து பருகினால் உடலில் குறை இரத்த அழுத்தம் குணமாகும்.
அதேபோல் முருங்கை கீரையில் சட்னி,முருங்கை டீ,முருங்கை தோசை செய்து சாப்பிட்டு வந்தாலும் குறை இரத்த அழுத்தம் குணமாகும்.