விவசாயத்தை ஊக்குவிக்க மாட்டு வண்டியில் வந்த மணமக்கள்… இணையத்தில் வைரலாகும் மணமக்கள்…

0
90

விவசாயத்தை ஊக்குவிக்க மாட்டு வண்டியில் வந்த மணமக்கள்… இணையத்தில் வைரலாகும் மணமக்கள்…

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் திருமணமான மணமக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து மணமக்கள் மாட்டு வண்டியில் வருவதை பார்த்த பொதுமக்கள் அனைவரும் செல்போன்களில் புகைப்படங்களும், வீடியோக்களும் எடுத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள காயாமொழி கிராமத்தில் வசித்து வரும் பெருமாள் அவர்களுக்கு மோகன்ராஜ் என்ற மகன் உள்ளார். மோகன் ராஜ் அவர்கள் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு விவசாயத்தின் மீது உள்ள ஆர்வத்தினால் பட்டயப்படிப்பு முடாத்துவிட்டு விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில் விவசாயி மோகன் ராஜ் அவர்களுக்கும் செந்தாமரைவிளை பகுதியை சேர்ந்த மாசான முத்து என்பவரின்.மகள் கலையரசிக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சியக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும், பாரம்பரியத்தின் படி நிலத்தை மாட்டு வண்டியை பயன்படுத்தி உழுதிட வேண்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மோகன்ராஜ் அவர்கள் மணமகள் வீட்டுக்கு மாட்டு வண்டியில் சென்று திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து திருமணம் முடிந்ததும் மணமகள் வீட்டில் இருந்து மணமகன் வீட்டுக்கு மணமக்கள் இருவரும் மாட்டு வண்டியில் செண்டை மேளத்துடன் உற்சாகமாகவும் ஆட்டம் பாட்டத்துடனும் காயாமொழி கிராமத்திற்கு ஊர்வலமாக வந்தனர். அப்பொழுது வழியின் இருபுறமும் நின்ற பொதுமக்கள் அனைவரும் மணமக்களை மலர் தூவி வரவேற்றனர்.

மணமக்கள் இருவரும் வீட்டுக்கு வந்து இறங்கிய பின்னர் மணமகன் வீட்டார் மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்பொழுது மணமகன் மோகன்ராஜ் அவர்கள் உற்சாகமாக நடனமாடி அனைவரையும் பரவசப்படுத்தினார்.

இதையடுத்து மணமகன் மோகன்ராஜ் அவர்கள் “விவசாயத்திற்கு இயந்திரங்களை பயன்படுத்துவதை கைடுவிடுங்கள். விவசாயத்திற்கு எந்திரங்களை பயன்படுத்துவதால் பாரம்பரிய விவசாயமும், விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள். விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் கால்நடைகளும் அழிந்து வருகின்றது. காளை மாடுகளை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும். இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும். இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே நான் மாட்டு வண்டியில் வந்தேன்” என்று கூறினார்.

Previous articleஆசிய கோப்பை தொடர் : அஸ்வின் ஏன் இடம்பெறவில்லை…? ரோகித் சர்மா விளக்கம்!
Next articleபிரசவ காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் கருத்து!