பெற்ற மகனை  கைற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கொடூர பெற்றோர்கள்!! நடந்தது என்ன?..

Photo of author

By Parthipan K

பெற்ற மகனை  கைற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கொடூர பெற்றோர்கள்!! நடந்தது என்ன?..

Parthipan K

The brutal parents who strangled their son's neck!! what happened?..

பெற்ற மகனை  கைற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கொடூர பெற்றோர்கள்!! நடந்தது என்ன?..

மதுரை சொக்கலிங்க நகரைச்  சேர்ந்தவர் நாகராஜன் இவனுடைய வயது 56.இவரது மனைவி குருவம்மாள் வயது 50.வீட்டின் அருகே இருவரும் வடைக்கடை  நடத்தி வந்தார்கள்.இவர்களது இளைய மகன் மாரிச்செல்வம் வயது 27.பத்தாம்  வகுப்பு மட்டுமே படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

அவ்வப்போது சிறு வேலைக்காக வெளியில் செல்வார்.இந்நிலையில் இவர் மது போதைக்கு அடிமையாகி இருந்தார்.இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.மேலும் தினமும் பெற்றோரிடம் பணம் கேட்டு அவ்வப்போது தொந்தரவு செய்துள்ளார்.நேற்று இரவு அவர் மருந்து அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் கலவரத்தில் ஈடுபட்டார்.

இரவு மது போதையில் வீட்டிற்கு வந்து தகறாரு செய்த மாரிசெல்வத்தை அண்ணனான நாகராஜன் கண்டித்துள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக நாகராஜனை பலமாக தாக்கியுள்ளார். தடுத்த தாயையும் கீழே தள்ளியுள்ளார்.

இதனால் மனவேதனையடைந்த பெற்றோர்கள் மது போதையில் இருந்த மாரிசெல்வத்தை வீட்டில் உள்ள கயிறை எடுத்து மாரி கழுத்தில் இறுக்கி கொலை செய்துள்ளனர்.அதன் பின்னர் இருவரும் எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் தாங்கள் செய்ததை எல்லாவற்றையும் கூறி சரணடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்த போலீசார் மாரி செல்வத்தின் உடலை கைப்பற்றி உடல்குரய்வுக்காக  மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக பெற்றோரின் மீது வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கொலை தொடர்பாக முதல் தளத்திலிருந்த அவரது மூத்த மகனிடமும்  விசாரணை நடத்தி வருகின்றனர்.பெற்ற மகனை கைற்றால் இறுக்கி கொலை செய்த பெற்றோர்களால்  அப்பகுதி மக்களிடையே பரபரப்பு நீடித்து வருகிறது.