Crime

கேலி செய்த கும்பலை தட்டிக்கேட்ட பெண் சுட்டுக்கொலை செய்யப்பட்ட கொடூரம் !!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரை, ஒரு கும்பல் கேலி செய்ததால் தட்டி கேட்டதன் காரணமாக அந்த பெண்ணை சுட்டுக் கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாக் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது பெண் ஒருவர் இரவில் சென்றுள்ளார்.அப்போது அங்கிருந்த ஒரு கும்பல், அந்த பெண்ணை கேலி செய்து ஆபாசமாக பேசினார் . இதனை கேட்ட அந்தப் பெண், அவர்களை திட்டிவிட்டு தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

மேலும் அந்த பெண் வீட்டிற்கு அந்த கும்பல் நள்ளிரவில் வந்து ஆபாசமாக மீண்டும் பேசியுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் மீண்டும், அந்த இளைஞர்களை சரமாரி திட்டி பேசியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், அந்த பெண்ணை சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிச் சென்றனர். படுகாயத்துடன் மீட்கப்பட்டு அந்த பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்த போது, அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து அந்தப் பெண்ணை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Comment