கூகுள் மேப்ஸ் ஏமாற்றிதால் ஓடையில் இறங்கிய கார்! நான்கு மாத குழந்தை உட்பட 4 பேர் உயிர் தப்பினர் !

0
135

கூகுள் மேப்ஸ் ஏமாற்றிதால் ஓடையில் இறங்கிய கார்! நான்கு மாத குழந்தை உட்பட 4 பேர் உயிர் தப்பினர் !

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த பெண் மருத்துவர் சோனியா, நான்கு மாத குழந்தை, அவரது தாய் மற்றும் அவர்களின் உறவினர் ஒருவர் காரை ஓட்டிவந்துள்ளது அனைவரும் திருவல்லா சென்று விட்டு மீண்டும் எர்ணாகுளம் திரும்பும்போது நேற்று இரவு 11.30 மணியளவில் கூகுள் மேப்பை பார்த்து காட்டிய வழியில் சென்ற போது பாரேச்சல் பைபாஸ் சாலை முடிந்து நேராக ஓடையில் இறங்கியுள்ளது.

கார் பயணித்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் காரில் இருந்தவர்களை காப்பாற்றினர். அப்பகுதியினர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.மழை காரணமாக கூகுள் மேப்பால் சாலையை சரியாக காட்ட முடியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Previous articleதுபாயிலிருந்து 3 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல்! 2 வாலிபர்கள் கைது 
Next articleதுபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆறரை கிலோ தங்கம்! 2 வாலிபர்கள் கைது!