கூகுள் மேப்பை பார்த்து கொண்டே வழி தவறி ஓடையில் பாய்ந்த கார்!..பரபரப்பில் அப்பகுதி மக்கள்!..
கூகுள் மேப்பை பார்த்துக்கொண்டு பெண் மருத்துவர் ஒருவர் தனது காரில் சென்றுள்ளார். கூகுள் மேப்பை கவனித்துகொண்டு பெண் மருத்துவர் தனது குழந்தை மற்றும் தாயுடன் சென்ற கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. தண்ணீர் நிரம்பிய ஓடையில் மிதந்து கொண்டிருந்த காரில் இருந்து குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இந்த விபத்தில் திருவல்லாவை சேர்ந்த மருத்துவர் சோனியா அவரது மூன்று மாத குழந்தை, தாய் மற்றும் காரை ஓட்டி வந்த உறவினர் ஆகியோர் இந்த விபத்தில் சிக்கினார்கள்.கூகுள் மேப்பை பார்த்து வழிதவறி விபத்து ஏற்பட்டதாக இதில் கூறப்படுகிறது.இந்த சம்பவம் வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் நாடகம் பாரேச்சல் புறவழிச்சாலையில் நடந்துள்ளது.
இதில் மருத்துவரும் அவரது குடும்பத்தினரும் எர்ணாகுளத்திலிருந்து திருவல்லாவுக்கு திரும்பி கொண்டு இருந்தனர். வழி தெரியாத நிலையில் கூகுள் மேப்பை பார்த்துக் கொண்டே காரை இயக்கியுள்ளார். இதனிடையே வலி தவறி கார் பாரேச்சல் பைபாஸ் அருகே வந்த போது கார் அருகில் இருந்த ஓடையில் தலை புரண்டு கவிழ்ந்தது.
விபத்துக்குள்ளான காரில் உள்ளவர்கள் அனைவரும் சத்தம் போட்டு அலறி கத்தினர். அப்போது அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காருக்குள் இருந்த நான்கு பேரையும் பத்திரமாக மீட்டனர். கோட்டையம் மேற்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த மனு மார்க்கோஸ் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
விபத்து ஏற்பட்ட இடத்தை போலீசார் விசாரணை செய்தனர். ஓடையில் தண்ணீர் இருந்ததால் அனைவரும் உயிர் தப்பியதாக தெரிவித்தார்கள்.இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.