ஆபாச பட நடிகை தொடுத்த வழக்கு!! டிரம்பின் கோரிக்கை மனு தள்ளுபடி!! வரும் 10-ம் தேதி தண்டனை உறுதி!!

0
91
The case filed by the porn actress!! Trump's request was dismissed!! Punishment confirmed on 10th!!
The case filed by the porn actress!! Trump's request was dismissed!! Punishment confirmed on 10th!!

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொன்லாடு டிரம்ப் அவர் கடந்த 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அமெரிக்கா ஜனாதிபதியாக பணியாற்றினார். தற்போது நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றி பெற்றார். அவர் வருகிற 20-ம் தேதி அமெரிக்க ஜனாதிபதி  பதவி ஏற்க உள்ளார். இதற்கிடையே அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகை ஸ்டோமி டெனியல் என்பவர் டொன்லாடு டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். 2006 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக ஸ்டோமி டெனியல் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கு 2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்பு தன்னுடன் பாலியல் உறவு விவகாரத்தை வெளியே சொல்ல கூடாது என்பதற்காக டொன்லாடு டிரம்ப் தனக்கு பணம் கொடுத்ததாகவும் ஸ்டோமி டெனியல் தெரிவித்தார். அந்த சமயத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக திரட்டப்பட்ட நிதியிலிருந்து 50 சதவீதம் அதாவது ஒரு லட்சத்து முப்பது ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பணத்தை ஸ்டோமியோவிற்கு கொடுத்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பூதாகரமாக நிலையில் டொனால்ட் டிரம்பிற்கு எதிரான பண மோசடி உட்பட பல்வேறு பிரிவுகள் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என கடந்த ஆண்டு ஜூன் மாதம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டொனால்ட் டிரம்பிற்கு இந்த  வாரம் பத்தாம் தேதி கோர்ட் தண்டனை அறிவிக்க இருக்கிறது. இந்த தண்டனை அறிவிப்பின்போது டொனால்ட் டிரம் நேரிலோ அல்லது காணொளி காட்சியின் மூலமாகவோ ஆஜராக வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு அறிவிப்பை தள்ளி வைக்கும்படி கோரி, டிரம்ப் சார்பில் நியூயார்க் கோர்ட்டு ஒன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், டிரம்ப்பின் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அதே வேளையில் டொன்லாடு டிரம்ப் சிறை தண்டனை  விதிக்கப்பட மாட்டாது எனவும் தகவல் கசிந்துள்ளது. இந்த வழக்கில் அபராதம் மட்டும் டொன்லாடு டிரம்ப் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வருகிற 20-ம் தேதி அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க உள்ள நிலையில் இந்த  வாரம் 10-ம் தேதி தண்டனை அளிக்கப்படும் நிகழ்வு அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous articleஇனிமே பேச்சே கிடையாது.. ஹமாஸுக்கு தேதி குறித்த டிரம்ப் !! இல்லையென்றால் போர் வெடிக்கும்!!
Next articleதிபெத்தில் கொடூர நிலநடுக்கம்.. 100 கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலி!! நடந்த நிலவரம் என்ன??