சேலம் மாவட்டத்தில்  சினிமா ஆசை காட்டி பெண்களை ஏமாற்றிய இயக்குனரின் வழக்கு? பெண் உதவியாளர் கூறிய திடுக்கிடும் தகவல் போலீசார் அதிர்ச்சி!

Photo of author

By Parthipan K

சேலம் மாவட்டத்தில்  சினிமா ஆசை காட்டி பெண்களை ஏமாற்றிய இயக்குனரின் வழக்கு? பெண் உதவியாளர் கூறிய திடுக்கிடும் தகவல் போலீசார் அதிர்ச்சி!

Parthipan K

Updated on:

The case of the director who cheated women by pretending to be a cinematographer in Salem district? The shocking information given by the female assistant shocked the police!

சேலம் மாவட்டத்தில்  சினிமா ஆசை காட்டி பெண்களை ஏமாற்றிய இயக்குனரின் வழக்கு? பெண் உதவியாளர் கூறிய திடுக்கிடும் தகவல் போலீசார் அதிர்ச்சி!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீரப்பன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேல் சத்ரியன்(38). இவர் சேலம்  ஏ.வி.ஆர் ரவுண்டானா பகுதியில் ஒரு தனியார் கட்டிடத்தில் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி நேர்காணல் நடப்பதாகவும் விளம்பரம் செய்து வந்துள்ளார்.

அந்த அலுவலகத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜாபளையம் இந்திரா நகரை சேர்ந்த ஜெயஜோதி(23) என்ற பெண் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.அங்கு வேல் சத்ரியன்சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஏமாற்றியுள்ளார் என  அங்கு பணிபுரிந்த பெண் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் சில பெண்களை வைத்து ஆபாச படம் எடுப்பதாகவும் ,அந்த அறை முழுவதும் ஆபாச படங்களை ஒட்டி வைத்திருப்பதாகவும் அவர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.அந்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து வேல்சத்ரியன் மற்றும் ஜெயஜோதி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

அந்த விசாரணையில் கடந்த எட்டு மாதங்களாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி 300க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி ஆபாசமாக படம்  எடுத்து வந்தது தெரியவந்தது.

மேலும் அலுவலக உதவியாளராக இருந்த ஜெயஜோதி மற்றும் இயக்குனர் வேல் சத்ரியன்  ஆகிய இருவரையும் மூன்று நாள்  காவலில் எடுத்து விசாரணை நடத்த சேலம் கூடுதல் மகளிர் கோர்ட்டில் மனு தொடரப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டனர். அதனையடுத்து ஜெயஜோதியிடம் ரகசியமாக முதல் நாள் விசாரணை நடத்தப்பட்டது.

அந்த விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தை போலீசார் ரகசியமாக வைத்துள்ளனர். இருப்பினும் சில தகவல்கள் கசிந்துள்ளது.அந்த தகவலில் ஜெயஜோதி சட்டப்படிப்பு படிப்பதற்காக சேலம் வந்துள்ளார். அப்போது வேல் சத்ரியன்னுடன் பழக்கம் ஏற்பட்டது. அதனையடுத்து வேல் சத்ரியனின் அலுவலகத்திலேயே வேலைக்கு சேர்ந்துள்ளார். சினிமாவில் நடிக்க வருபவர்களுக்கு வசனங்கள் பேச கற்று கொடுப்பது போன்ற வேலை செய்துள்ளார்.

அங்கு வரும் சில பெண்களுடன் வேல் சத்ரியன் உல்லாசமாக இருந்ததும் தெரியவந்துள்ளது. அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த கேமராமேன் ,மற்றும் அலுவலக உதவியாளர்கள் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் விசாரணை நடத்தினால் பல திடுக்கிடும் தகவல் வெளியாகும் எனவும்  போலீசார் கூறிவருகின்றனர்.