அலர்ஜி ஏற்படுவதற்கான காரணம்! இதனை மட்டும் தவிர்த்தால் போதும்!

Photo of author

By Parthipan K

அலர்ஜி ஏற்படுவதற்கான காரணம்! இதனை மட்டும் தவிர்த்தால் போதும்!

Parthipan K

அலர்ஜி ஏற்படுவதற்கான காரணம்! இதனை மட்டும் தவிர்த்தால் போதும்!

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உடம்பில் தேவையற்ற அழுக்குகள் இருப்பதாலும் மண் ,தூசிகள் போன்றவை தோல் சம்பந்தமான பிரச்சனைகளை உண்டாக்கும். பெரும்பாலான நேரங்களில் அரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அரிப்பாகவும் ,சொறி, சிரங்கு, தேமல் போன்ற அறிகுறிகளால் நமக்கு தெரிய வந்துவிடும். பொதுவாக சிலருக்கு சில வகை உணவுகள் ஒத்துக் கொள்ளாமல் இருந்தாலும் அது சருமத்தில் அரிப்பை உண்டாக்குகிறது.

குழந்தைகளுக்கு அடிக்கடி டயப்பர் போடுவதால் கூட சருமத்தில் இந்த அரிப்பானது தென்படக்கூடும். சருமத்தை காற்றோட்டமாக விட வேண்டும். இல்லையெனில் இந்த மாதிரியான அரிப்பை ஏற்படுத்தி விடும். சிலருக்கு ஒரு இடத்தில் ஏற்படக்கூடிய இந்த தேமல் ஆனது உடம்பில் அனைத்து இடங்களிலும் பரவக்கூடிய தன்மை உண்டு. ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த தோல் அலர்ஜி இருக்கக்கூடும் என சில நிபுணர்கள் கூறுகின்றன. சீரான உணவுகளை உப்பு கொள்ளாமல் இருப்பது உடல் பலவீனமாக இருப்பது தோல் அலர்ஜி ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் மிகவும் அதிகம்.

உடலில் இருந்து வெளியே வருவது ஒரு வகை உடலில் உள்ளே இருப்பது மற்றொரு வகையாகும். உடலில் இருந்து வெளியே வருவது எதுவென்றால் அழகு சாதன பொருட்களான சோப்பு, செண்டு, தலைசாயம், நெகபாலீஸ் ,கிரீம் போன்றவை உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் விட்டால் உடம்பில் அலர்ஜி ஏற்படும். சிலருக்கு துணி வகைகளாலும் இந்த அரிப்பானது உண்டாகிறது. அதனால் இவ்வாறான பொருட்களை தவிர்ப்பதினால் அலர்ஜியிலிருந்து நாம் உடனடியாக விடுபடலாம்.