சிறுவனின் பார்வை இழப்பிற்கு காரணம் இந்த மருத்துவமனை தான்! ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
மதுரை மாவட்ட ராஜபாளையம் அருகே சோழபுரத்தைச் சேர்ந்தவர் மூக்கையா. இவரது மகான் அர்ஜூன். 2002 ஆம் ஆண்டு தலவாய்புரத்தில் நடத்தப்பட்ட கண் மருத்துவ முகாமில் கலந்து கொண்டார். அவருக்கு பார்வை குறைபாடு இருப்பதால் மதுரை மருத்துவமனையில் வலது கண்ணின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் பார்வை குறைபாடு சரியா ஆகவில்லை.
இதனால் 2009 வரை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டனர். அப்போதும் பார்வை கிடைக்கவில்லை. அதையடுத்து சிறுவனின் பெற்றோர் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அந்த சிறுவனை அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த பொழுது அவர் பார்வை இழந்ததாக தெரியவந்தது. இதனையடுத்து சிறுவனின் தந்தை மூக்காயா, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் 2010ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறுவனுக்கு இழப்பீடாக மதுரையைச் சேர்ந்த தனியா கண் மருத்துவமனை 8 லட்சம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. மேலும் அந்த சிறுவனின் மன உளைச்சலுக்காக ரு 2 லட்சமும் வழக்கு பதிவு செலவுகளுக்காக 10,000 வழங்க வேண்டும் எனவும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.