மும்மொழி கொள்கையை ஏற்றால் மட்டுமே கல்வி நிதி என மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்த நிலையில், எங்களால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒருபுறம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் நடத்தக்கூடிய பள்ளிகளில் மும்மொழி கொள்கை பின்பற்றப்படும் பொழுது ஏன் அரசு பள்ளிகளில் பின்பற்றக் கூடாது என கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு மற்றும் ஆளுங்கட்சி சார்பில் பதில்கள் கூறப்பட்டன. என்ன நடந்தாலும் இவர்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என முடிவெடுத்த மத்திய அரசு தற்போது தமிழக அரசுக்கு செக் வைத்திருக்கிறது.
அதாவது, மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் புதிய விதிமுறைகளின் படி, தனியார் சி பி எஸ் சி பள்ளிகள் இனி மாநில அரசினுடைய அனுமதியை பெற வேண்டாம் என்றும் பள்ளிகளை நிறுவ மத்திய அரசிடம் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புதிய விதிமுறைகள் படி இவ்வாறு தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், மத்திய அரசு அங்கீகாரம் கொடுத்த சிபிஎஸ்சி பள்ளிகள் இடம்பெறுவதால் மாநில அரசுக்கு ஏதேனும் தடை உள்ளதா என கேட்கப்படும் என்றும் அவர்களுடைய கருத்துக்களை ஏற்றுக் கொண்ட பின்பு எந்த தடையும் இல்லை என்றால் பள்ளிகள் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய விதிமுறைகளின் படி மத்திய அரசாங்கம் முடிவுகளை நாங்கள் எடுப்போம் எங்களுடைய முடிவுகளுக்கு கருத்துக்களை நீங்கள் தெரிவிக்கலாம் என மத்திய அரசுக்கு தெரிவிப்பதாக அமைந்துள்ளது. எனினும் ஏற்கனவே தமிழகத்தில் செயல்படக்கூடிய பல்வேறு தனியார் சிபிஎஸ்சி பள்ளிகளில் மாணவர்களின் விருப்பத்தின் பேரில் மும்மொழி கொள்கை ஆனது பின்பற்று பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.