ஆளுநர் ஆர் என் ரவி மீது தமிழ்நாடு அரசு தொடுத்திருந்த வழக்கினை உச்ச நீதிமன்றம் விசாரித்து ஆளுநர் அவர்களுக்கு தனியான உரிமை கிடையாது என்றும் சட்ட மசோதாக்களை சட்டத்தின்படி நிறைவேற்றுவதே அவருடைய கடமை என்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படக்கூடிய சட்ட மசோதாக்களுக்கு 3 மாதங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் இது குறித்து குடியரசு தலைவரும் 3 மாதத்தில் விரிவான கடிதம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இதனை பலரும் பலவாறு விமர்சித்து வரக்கூடிய நிலையில் மத்திய அரசு முக்கிய முடிவுகளில் உச்ச நீதிமன்றம் குறிப்பிடுவதாகவும் அரசுக்கு நீதிமன்றம் ஆணையிடுவது முறையானதாக இல்லை என மத்திய அரசு சம்பந்தப்பட்ட பலரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை தங்களுடைய வாய்க்கு வந்தபடி பேசி வரக்கூடிய நிலையில் அவர்கள் மீது அவதூறு வழக்கு போடுவதற்கே உச்சநீதிமன்ற நீதிபதிகள் தயங்கி வருகின்றனர்.
இப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வக்கீல் ஒருவர் ஆஜராகி வக்பு திருத்த மசோதா பிரச்சனையால் மேற்கு வங்காளத்தில் சட்ட சீர்கேடு நடைபெறுவதாகவும் இதனை தடுக்க அம் மாநில அரசு தவறிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், அங்கு பிரச்சனையை சமாளிப்பதற்காக துணை ராணுவ படையை அனுப்பி வைக்க உச்ச நீதிமன்ற தரப்பில் ஆணை பிறப்பிக்க வேண்டும் என அவர் கேட்ட நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்கனவே மத்திய அரசினுடைய அனைத்து முடிவுகளிலும் உச்ச நீதிமன்றம் தலையிடுகிறது என அவர்கள் கோபத்தில் இருக்கும் பொழுது மீண்டும் மீண்டும் அரசினுடைய செயல்களில் உச்ச நீதிமன்றம் தலையிடுவது போல் அமைவதாக கூறி இனி இதுபோன்ற வழக்குகளை தொடர வேண்டாம் என்றும் மீறி வழக்கு தொடரப்பட்டால் அவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாது என்றும் தெரிவித்துள்ளனர்.