“கடந்த 2016 ஆம் ஆண்டு ‘வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீடு திட்டம், திருத்தப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம் (எம்.என். ஏ.ஐ.எஸ்)’ போன்ற திட்டங்களை இந்திய அரசு திரும்ப பெற்றது”. இதனைத் தொடர்ந்து, ‘விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்’. வானிலை மாற்றத்தின் காரணமாக, ஏற்படும் சேதத்தினால் பலரின் வாழ்க்கையும் பாழாகின’. இதனை மனதில் கொண்டு, இந்த வருட புத்தாண்டுக்கு “மத்திய அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது”.
“பிரதான் மந்திரி ஃபஸல் பீமா யோஜனா ( பி.எம்.எஃப்.பி.ஒய் )இதுவே விவசாயிகளை காக்கும் திட்டம்”. “2025 ஆம் ஆண்டுக்கான அமைச்சரவை கூட்டத்தில், ‘பிரதான் மந்திரி ஃபஸல் பீமா யோஜனா மற்றும் வானிலை மாற்றத்தால் ஏற்படும் பயிர் சேதக் காப்பீடு’ போன்ற திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது”. இந்தத் திட்டமானது விவசாயிகளுக்கு ‘வானிலை மாற்றம் காரணமாக ஏற்படும் ஆலங்கட்டி மழை, சூறாவளி மற்றும் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு காப்பீடு’ பெற்றுக் கொள்ள முடியும்.
இதனால் விவசாயிகள் பெரும் துயரத்திலிருந்து விடுபடுவர். இந்தத் திட்டத்தில் “உணவு பயிர்கள் (தானியம், திணை மற்றும் பருப்பு வகைகள்), எண்ணெய் விதைகள், வருடாந்திர (வணிக, தோட்டக்கலை) பயிர்கள் ஆகியவை அடங்கும்”. இது ‘பயிர்கள் நலனில் முன்னணி காப்பீட்டு திட்டம்’ என உறுதி செய்யப்பட்டது.