ஆசிரியர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி! மீண்டும் பள்ளிக்கு சென்று படிக்க தொடங்கிய முதல்வர் மற்றும் அமைச்சர்!
கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து இந்த முறைதான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி தேர்வு நடைபெற்றது. பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று முடிந்தது. மேலும் கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. 1 முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித் துறை அமைச்சர் கூறியிருந்தார். அதேபோல் இன்று பள்ளிகள் திறக்கப்படுவதை யொட்டி மாணவர்கள் ஆர்வத்துடன் கிளம்பினார். மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு சில தினங்களுக்கு முன்பே பள்ளியில் கழிவறைகள் வகுப்பறைகள் அனைத்தும் சீரான பராமரிப்பு நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு அனைத்து பள்ளி நிர்வாகத்திற்கும் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டார்.
கொரோனா தொற்றின் காரணத்தினால் தொடக்கப்பள்ளி மாணவர்கள் கற்பித்தல் போன்ற ஆரம்பகட்ட நிலையிலேயே மறக்கும் அவலம் ஏற்பட்டுவிட்டது. அதில் இருந்த மாணவர்கள் மீள இன்று முதல்வர் எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் எழுத்தறிவு மற்றும் எண் அறிவை விரைவில் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.இந்த திட்டம் மூலம் மாணவர்கள் 2025 ஆம் ஆண்டுக்குள் எழுத்தறிவு மற்றும் எண்ணரிவில் மேலூங்கியவர்களாக காணப்படுவர் என்றும் தெரிவித்தார்.மேலும் இத்திட்டத்திற்கான கைபேசி செயலியையும் வெளியிட்டார்.
இத் திட்டத்தை தொடங்கி வைத்த கையோடு திருவள்ளுவர் வடகரை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அச்சமயத்தில் வகுப்பறையில் மாணவர்களுடன் மாணவர்களாக அமர்ந்து முதல்வர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் ஆசிரியர் நடத்தும் பாடங்களை கவனிக்கத் தொடங்கினர். அதுமட்டுமின்றி அப்பள்ளியில் உள்ள சமையலறை, கழிவறை போன்றவற்றையும் சோதனை செய்தனர்.