தமிழக வேளாண் திருவிழாவை தொடங்கி வைத்த முதல்வர்!! விவசாயிகளுக்கு புதிய அறிவிப்பு
தமிழ்நாட்டில் விவசாயத்தை கொண்டாடும் வகையில் இரண்டு நாள் வேளாண் திருவிழா கொண்டாடப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த திருவிழாவில் விவசாயிகளை பெருமை படுத்தும் வகையில் வேளாண் சார்ந்த பொருட்கள் காட்சி படுத்தபடும் என்றும் தெரிவித்திருந்தது. இது தமிழ்நாடு உழவர் உற்பத்தியாளர் அமைப்பு விவசாயிகள் நலத்துறையுடன் இணைந்து விவசாயிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் திருவிழா நடத்தபடுகிறது.
அதன்படி இரண்டு நாட்கள் சென்னை வர்த்தக மையத்தில் வேளாண் வணிக திருவிழா நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. மேலும் இதில் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் வேளாண் பொருட்கள் திருவிழாவில் காட்சிப்படுத்தப்படும் என்றும் அறிவித்திருந்தது. இந்த திருவிழாவை காண பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என்றும் அறிவித்திருந்தது. இந்த விழா நடைபெறுவது விவசாயிகளை பெருமை படுத்தும் வகையில் அமையும் என தெரிவித்திருந்தது.
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் வேளாண் திருவிழாவை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் அதிகளவில் உற்பத்தி அளித்த விவசாயிகளுக்கும், அதிக ஏற்றுமதி செய்த விவசாயிகளுக்கும் வேருதுகளை வழங்கினார்.
இந்த திருவிழா பேசிய முதல்வர் திமுக விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வசதியும் செய்து தருவதாக கூறினார். அதனையடுத்து 61 கோடி ரூபாயில் குறுவை சாகுபடி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் விவசாயிகளை விற்பனையாளராக மாற்ற வேண்டும் மற்றும் வேளாண்துறைக்கு புதிய தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதனையடுத்து அவர் மத்திய அரசு விவசாயிகளை துன்புறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.