மீண்டும் 5 நாட்கள் மழை எச்சரிக்கை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!! வானிலை மையம் அறிவிப்பு!! 

0
34
Again 5 days of rain warning fishermen do not go to the sea!! Meteorological Center Announcement!!
Again 5 days of rain warning fishermen do not go to the sea!! Meteorological Center Announcement!!

மீண்டும் 5 நாட்கள் மழை எச்சரிக்கை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!! வானிலை மையம் அறிவிப்பு!!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக்கண்ணன் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும்  கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியால்  தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

மேலும்  மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஜூலை 8,9 ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.  மேலும் தமிழகத்தில் திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கும் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

தற்போது மேற்கு திசை காற்றின்  வேக மாறுபாடு காரணமாக ஜூலை 8 முதல் ஜூலை 12ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் 48 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கடலோர பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கும் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தியுள்ளது.

author avatar
Jeevitha