முதலமைச்சர் தொடங்கி வைத்த முக்கிய திட்டம்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் எதுவும் இல்லாமல் நோயாளிகள் அவசர ஊர்தி இடையே காத்திருந்து உயிரிழந்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவரையில் பொதுமக்களின் நலன் கருதி ஊரடங்கு அமல்படுத்தாமல் இருந்த தமிழக அரசு வேறு வழியில்லாமல் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தியது. அந்த சமயத்தில் கூட பாதிப்பு கட்டுக்குள் வராத காரணத்தால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த முழு ஊரடங்கு காரணமாக, பொது மக்கள் மிக கடுமையாக பாதிக்கப் பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் திரைப்பட தொழிலாளர்கள் என்று பலரும் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். இதன் காரணமாக, அவர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கி வருகின்றது. இந்த சூழ்நிலையில் மிகவும் நலிவுற்ற இயல், இசை, நாடக கலைஞர்களுக்கு மாதம் 3000 ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார். கலை பண்பாட்டு துறை சார்பாக நீண்ட நிதியுதவி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.