தமிழக பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி சென்னை டிநகரில் இருக்கின்ற கமலாலயத்தில் நேற்று பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்தார்.
அப்பொரு அவர் தெரிவித்ததாவது மத்திய கல்வி நிறுவனங்களில் ஹிந்தி கட்டாய மொழியாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்து இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் அப்படி எதுவும் தெரிவிக்கவில்லை மத்திய கல்வி நிறுவனங்களில் ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தி பயிற்று மொழியாகவும் மற்ற மாநிலங்களில் அந்த மாநில மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று தான் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் இருக்கின்ற மத்திய பல்கலைக்கழகங்களில் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது முதலமைச்சரின் கண்களுக்கு தெரியவில்லையா என்று கேள்வி எழுப்பி உள்ளார் நாராயணன் திருப்பதி.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவர் எந்த விதமான ஆதாரமும் இன்றி எதையும் தெரிவிக்க கூடாது சுதந்திர நாட்டில் இதுவரையில் இல்லாத அளவிற்கு தமிழ் மொழிக்கு மிகப் பெரிய அந்தஸ்தை மத்திய அரசு வழங்கி வருகிறது என்று குறிப்பிட்டார் நாராயணன் திருப்பதி.
நாடு முழுவதும் ஹிந்தியை பொது மொழியாக வேண்டும் என்ற பரிந்துரையை செய்திருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் அது போன்ற எந்த ஒரு பரிந்துரையும் இதுவரையில் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார் நாராயணன் திருப்பதி.
உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்ததற்காக முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.