பாஜக நிர்வாகிகளின் கால்களை கழுவிய முதல்வர்! வெளிவந்த வீடியோ பதிவு!!

0
234
The Chief Minister who washed the BJP leader's feet! Released video!!
The Chief Minister who washed the BJP leader's feet! Released video!!

பாஜக தலைவர் கால்களை கழுவிய முதல்வர்! வெளிவந்த வீடியோ பதிவு!!

அசாம் பகுதியில் புதிய பாஜக அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே பி நட்டா ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுடன் இதர பாஜக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். திறப்பு விழா நடைபெறும் வேளையில், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா, பாஜக மூத்த நிர்வாகிகளின் பாதங்களை கழுவினார். அதற்கு பூஜை செய்தார். பாதங்களை கழுவி பூஜை செய்த வீடியோவை இவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவ்வாறு பதிவிட்டார்,பூஜை செய்ததற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.பாஜக கட்சி இந்த அளவிற்கு வலுவடைந்து நிற்க இந்த மூத்த நிர்வாகிகள் தான் காரணம், அதனால்தான் அவர்களது கால்களுக்கு மரியாதை செலுத்தினேன்.அதனை நான் பெருமிதமாகவும் நினைக்கிறேன் எனக்கு கூறினார். அதுமட்டுமின்றி மூத்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவது பாஜகவின் கட்சியின் பாரம்பரியம், அதுதான் இந்திய கலாச்சாரம் என்று தனது பதிவில் கூறியுள்ளார். இந்த வீடியோவானது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Previous articleமீண்டும் வேலையைக் காட்டும் வடிவேலு… லைகா நிறுவனம் அதிருப்தி!
Next articleசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல  பூஜைகள்! அடுத்த மாதம் முதல் தொடங்கும் ஆன்லைன்  முன் பதிவு!