“களமிறங்கிய ஐஎன்ஏ”அடுத்தடுத்து பரபரப்பில் முதல்வர் அவசர ஆலோசனை! தமிழக அரசுக்கு பிரஷர் கொடுக்கும் பாஜக!
தீபாவளிக்கு முந்தைய நாள் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கார் சிலிண்டர் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருந்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. உயிர் இழந்தவர் ஜமேஷா என்பது தெரியவந்தது. இவர் உயிரிழந்த இடத்தை சோதனை செய்ததில் ஆணி, இரும்பு குண்டு ஆகியவை கிடந்தது. அதன் அடிப்படையில் இவரது வீட்டை சோதனை செய்ததில், அவர் வீட்டில் இருந்த நாட்டு வெடிகுண்டு செய்வதற்கான பொருள்கள் கைப்பற்றப்பட்டது.
மேலும் அவருடன் இருந்த ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்நிலையில், முதல்வர் இது குறித்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. பல கட்சியினர் ஏன் முதல்வர் மௌனம் காத்து வருகிறார் என்று அடுக்கடுக்காக கேள்விகளை வைத்து வருகின்றனர்.ஆனால் முதல்வர் ஏதும் கண்டுக்கொள்ளவில்லை.
இந்நிலையில் ஐஎன்ஏ இன்று பிற்பகல் முதல் களத்தில் இறங்கி ஆய்வு செய்து வருகிறது. அதுமட்டுமின்றி தற்பொழுது வரை போலீசார் கைப்பற்றியுள்ள ஆதாரங்கள் குறித்து விசாரிப்பதாகவும் கூறுகின்றனர். சம்பவம் நடந்து முடிந்து இரண்டு மூன்று நாட்கள் ஆன நிலையில் எதையும் கண்டுகொள்ளாத முதல்வர் ஸ்டாலின், இன்று தான் டிஜிபி சைலேந்திரபாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி , உளவுத்துறை ஆகியோருடன் ஆலோசனை நடத்தியது.
மேலும் இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். தற்பொழுது வரை என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்தும் இந்த வழக்கு சம்மந்தமாக முதல்வர் கேட்டுக் கொண்டார். இன்று களமிறங்கிய ஐஎன்ஏ,முதல்வரின் ஆலோசனைக்கூட்டம் இது அனைத்தும் பாஜக கொடுத்த அழுத்தமாக இருக்கலாம் என அரசியல் சுற்றுவட்டாரங்கள் கூறுகின்றனர்.