பானிபூரி குருமாவில் விழுந்த குழந்தை! கவனக்குறைவால் ஏற்பட்ட விபரீதம்!
நமது தமிழகத்தில் சமீப காலமாக வட மாநிலத்தின் உணவுகள் மேல் மக்களுக்கு அதிகம் நாட்டம் ஆகி வருகிறது. அவற்றில் நமது தென்னிந்திய மக்களுக்கு அதிக அளவு விரும்பி உண்ணும் உணவாக முதலில் இருப்பது பானிபூரி தான். முதலில் ஆங்காங்கே ஒன்றிரண்டு கடைகள் இருந்த நிலையில் தற்போது எந்தப் பக்கம் திரும்பினாலும் கடை உள்ளது. இந்த பானிபூரி உணவின் ஆளையே ஓர் மனதை உலுக்கும் அளவிற்கு ஒரு அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. கும்பகோணம் செட்டி மண்டபம் என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் முருகேசன் மற்றும் அனுசியா.
இருவருக்கும் திருமணமாகி இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. முருகேசன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அனுசியா குழந்தையை கவனித்துக் கொண்டு வீட்டிலேயே மாலை நேரத்தில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் முருகேசன் வேலைக்கு சென்று விட்டார். கணவர் வேலைக்கு சென்றதும் அனுசுயா தனது பானிபூரி கடை வைப்பதற்கு தேவையானவற்றை தயார் செய்து வந்துள்ளார். அவரு முதலில் பானி பூரிக்கு தேவையான குருமாவை தயார் செய்துள்ளார்.
அதனை தயார் செய்து ஒரு பக்கம் வைத்துள்ளார். அச்சமயத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறுதலாக அவர் தயார் செய்து வைத்திருந்த பானி பூரி குருமாவில் விழுந்துவிட்டது. அந்த குருமா மிகவும் கொதித்த நிலையில் இருந்ததால் குழந்தையால் சூடு தாங்க முடியவில்லை. அதில் விழுந்ததும் அந்த குழந்தை அலற ஆரம்பித்து விட்டது. சத்தம் கேட்டு வந்த அனுஷாவிற்கு செய்வதறியாது தவித்து நின்றார். பிறகு குழந்தையை தூக்கி சென்று அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பிறகு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். தீவிரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி பொழுது ரிஷி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பெரும்பாலும் குழந்தைகள் விளையாட்டு நிலையிலேயே இருப்பார்கள். அவர் இருக்கும் நிலையில் இது போன்ற பொருட்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும். மேலும் பானிபூரி குருமாவில் இரண்டு வயது குழந்தை ரிஷி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.