வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள்! கரூரில் அரங்கேறிய சம்பவம்!
கரூர் மாவட்டம் அருகே வெங்கமேடு செல்வ நகரை சேர்ந்தவர் மல்லிகா (70).அந்த பகுதியில் உள்ள கடைக்குச் சென்று விட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 17 வயது சிறுவர்கள் இரண்டு பேர் மல்லிகாவை பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் பின் தொடர்வதை கவனித்த மல்லிகா வேகமாக நடக்க தொடங்கினார்.
அப்போது அந்த சிறுவர்கள் மல்லிகாவை கத்தியை காட்டி மிரட்டினார்கள். மல்லிகாவிடம் இருக்கும் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து அந்த இரண்டு சிறுவர்களும் தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து மல்லிகா வெங்கமேடு போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் இரண்டு சிறுவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்படலாம் என்றும் பேசி வருகின்றனர்.