குப்பைமேடாக காட்சியளிக்கும் கோவை மாநகரம்! கோரிக்கைகளை நிறைவேற்றதாக அரசு?
கோவையில் சுமார் 6500 க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளது. தினம்தோறும் ஆயிரம் டன் வரை குப்பைகள் குவியும். இவ்வாறு சேகரிக்கும் குப்பைகளை வெள்ளலூர் பகுதியில் உள்ள கிடங்கிற்கு கொண்டு செல்வர். கோவையில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு என 16 கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி கேட்டு வருகின்றனர். ஆனால் அரசு இதற்கு சிறிதும் செவி சாய்க்கவில்லை.
இதனால் கோவை மாநகர ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கடந்த இரண்டாம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால் கோவை முழுவதும் குப்பைகள் குவிய தொடங்கியது. எந்த பக்கம் திரும்பினாலும் ஆங்காங்கே குப்பைகளாகவே காணப்பட்டது. இதனால் அந்தந்த பகுதிகளில் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமாகவே இருந்தது.இதனையடுத்து இவர்கள் கேட்ட கோரிக்கையை நிறைவேற்றுவதாக அம்மாவட்ட ஆணையர் ஒப்பந்த தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் தற்பொழுது வரை ஒப்பந்த தூய்மையாளர் வைத்த கோரிக்கைகள் சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு சென்றால் மீண்டும் அவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை கையில் எடுப்பது உறுதி எனக் கூறுகின்றனர்.மீண்டும் கோவையானது குப்பை மேடாக காட்சி அளிக்கும்.