பள்ளி குழந்தைகள் ஆற்றை கடந்து செல்லும் அவலம்! மக்களின் கோரிக்கையை கண்டுக்கொள்ளாத அரசு!

0
57
The plight of school children crossing the river! The government does not recognize the demand of the people!
Determined for The plight of school children crossing the river! The government does not recognize the demand of the people!education, students cross river dangerously to reach school

பள்ளி குழந்தைகள் ஆற்றை கடந்து செல்லும் அவலம்! மக்களின் கோரிக்கையை கண்டுக்கொள்ளாத அரசு!

வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் பீமாண்டப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள் ஓட்டூர்,பாறையூர் ,கொல்லப்பள்ளி,மாரிகவுண்டனூர் ,கங்கசந்திரம்,சோமநாதபுரம் போன்ற கிராம மக்கள் முதன்மை தொழிலாக விவசாயம் மட்டுமே செய்து வருகின்றனர்.மேலும் அதன் மூலம் விளையும் காய்கறிகள் உள்ளிட்ட விளை பொருட்களை விவாசாயிகள் தினமும் குருபரப்பள்ளி வழியாக கிருஷ்ணகிரி ,சூளகிரி பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு எடுத்து செல்வது வழக்கம்.

மேலும் இந்த கிராமத்தில் தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது.ஆறாம் வகுப்பு முதல் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்விக்கு மாணவ ,மாணவிகள் குருபரப்பள்ளிக்கு செல்கின்றனர்.இந்நிலையில் குருபரப்பள்ளிக்கு போதிய பேருந்து வசதி இல்லை.அதனால் மாணவர்கள் தினமும் எட்டு கிமீ தூரம் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் அங்குள்ள கிராமங்களில் இருந்து மொத்தம் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குருபரப் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.அதில் சில மாணவர்கள் எட்டு கிமீ தூரத்தை குறைக்க கொல்லப்பள்ளி கிராமம் வழியாக செல்லும் மார்க்கண்டேய நதியை கடந்து புளியஞ்சேரி கிராமத்திற்கு சென்று அங்கிருந்து பேருந்து மூலம் குருபரப்பள்ளிக்கு செல்கின்றனர்.

தற்போது அனைத்து இடங்களிலும் அதிகளவு மழை பொழிந்து வந்ததால் மார்க்கண்டேய நதியில் அதிகளவு தண்ணீர் செல்கின்றனர்.அதனால் ஆற்றை மாணவர்கள் அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் ஒருசில நேரங்களில் அதிகளவு தண்ணீர் செல்வதால் அந்த வழியாக மாணவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.மேலும் ஒரு சில மாணவர்கள் பேருந்து வசதி இல்லாததால் மேல்நிலை கல்வியை தொடர முடியாமல் உள்ளனர்.அதனையடுத்து பேருந்து வசதி வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டதின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ள வில்லை என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.விரைவில் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

author avatar
Parthipan K