டெல்லியில் 71 ஆண்டுகளுக்கு பிறகு வீசிய குளிர் அலை!

0
139

1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லி மாநிலத்தில் குறைந்தபட்ச சராசரி வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகிஉள்ளது. அதாவது இந்த வெப்பநிலையில் அதிக அளவில் குளிதலை குளிர் அலை வீசுமாம்.

இதே 10.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை 71 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் பதிவாகி இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு வெப்பநிலை குறைவதால் டெல்லியில் தற்போது குளிர் அலை வீசுகிறதாம்.

இந்த மாதம் 3, 20, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வெளிமாநிலத்தில் பயங்கர குளிர் அலை வீசியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே டெல்லியில் நவம்பர் மாதத்தில் 12.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வந்தது.

அதற்கு முன்னர் 1938ஆம் ஆண்டு 9.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், 1931 ஆம் ஆண்டு 9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், 1930 ஆம் ஆண்டில் 8.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Previous articleபாமகவின் அதிரடி திட்டம்! உஷாரான உளவுத்துறை!
Next articleசாங் இ-5 விண்கலம் குறித்து சீன தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அடுத்த நடவடிக்கை!