போதை மீட்பு மையத்தில் நடந்த அடிதடி! அநியாயமாக கொலை செய்யப்பட்ட வாலிபர்! அதிரடி காட்டிய போலீசார்!

போதை மீட்பு மையத்தில் நடந்த அடிதடி! அநியாயமாக கொலை செய்யப்பட்ட வாலிபர்! அதிரடி காட்டிய போலீசார்!

சென்னை செங்குன்றத்தில் தண்டல் கழனி விஜயா நகரில் ஒரு போதை மீட்பு மையம் இயங்கி வருகிறது. அதை ரூபன் பால் என்பவர் இயக்கி வருகிறார். இந்த மையத்தில் மொத்தம் 50 க்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டம் மன்னார் மண்டலத்தை சேர்ந்த வம்சி என்பவரும் சிகிச்சை பெற்று வந்தார்.

இவருக்கு வயது 29 ஆகிறது. அதே மையத்தில் ஆவடியை அடுத்த பட்டாபிராம் வயலா நல்லூரைச் சேர்ந்த பென்னிஹின், கும்மிடிப்பூண்டியை அடுத்த பல்லாகுப்பத்தைச் சேர்ந்த தேவராஜ், செங்குன்றத்தை அடுத்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்த யாசின் ஷரிப், சென்னை வியாசர்பாடியில் கக்கன்ஜி காலனியைச் சேர்ந்த கேசவன் ஆகிய 4 பேரும் அங்கே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவர்களுக்கும், ஆந்திராவைச் சேர்ந்த வம்சிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இந்த தகராறு ஏற்பட்டு உள்ளது. அது அப்படியே கைகலப்பாக மாறி உள்ளது. அதன் பிறகு இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த அந்த நான்கு நபர்களும் இரும்புக் கம்பியைக் கொண்டு வம்சியை அடித்தே கொன்றுள்ளனர். இந்த குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போலீசார் மற்றும் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கொலையான வம்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து அந்த நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். போதை மீட்பு மையத்தில் சிகிச்சைக்காக வந்துவிட்டு இந்த அடிதடி எல்லாம் தேவையா? இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment