தெற்கு சீனாவில் இருக்கக்கூடிய நிறுவனம் ஒன்று தன்னுடைய பணியாளர்கள் பாத்ரூம் செல்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்த புதிய கட்டுப்பாடுகள் பணியாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடையையும் கோபத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
குவாங்டாங் மாகாணத்தில் இருக்கக்கூடிய போஷான் என்ற நகரத்தில் 3 பிரதர்ஸ் மிஷின் மேனுஃபாக்சரிங் என்கின்ற பிரபல நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி முதல் பணியாளர்கள் கழிவறை செல்வதற்கு சில முக்கிய விதிகள் பின்பற்றப்படுவதாக வெளியான தகவல் மக்களை அதிர்ச்சி உள்ளாக்கி உள்ளது.
பிப்ரவரி 11 முதல் நிறுவனத்தில் பின்பற்றப்படும் கட்டுப்பாடுகள் :-
✓ இந்த நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய பணியாளர்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே கழிவறைகளுக்கு செல்ல வேண்டும்.
அந்த நேரங்கள் :-
* காலை 8 மணிக்கு முன்
* 10.30-10.40
* மதியம் 12-1.30
* 3.30-3.40
* மாலை 5.30-6.00
* கூடுதல் பணியில் செய்பவர்கள் இரவு 9 மணிக்கு மேல்
✓ இதனை தவிர்த்து ஏதேனும் அவசரம் என்றால் நிறுவனத்தில் அனுமதி பெற்ற பின்னர் தான் கழிவறைக்கு செல்ல வேண்டும்.
✓ கழிவறைக்கு செல்வதற்கு 2 நிமிடங்கள் மட்டுமே அவகாசமாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இதனை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் இந்த கட்டுப்பாடுகளை மீறக்கூடியவர்களுக்கு 100 யுவான் அதாவது 1200 ரூபாய் அபராதம் என்று கட்டுப்பாடை விதித்து பணியாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் கோபத்தை பெற்றிருக்கிறது இந்த நிறுவனம்.