ரயில் தண்டவாளத்தில் கிடந்த பிணம்! அதிர்ச்சியில் கிராம மக்கள்!

0
330
The corpse lying on the train tracks! Villagers in shock!
The corpse lying on the train tracks! Villagers in shock!

ரயில் தண்டவாளத்தில் கிடந்த பிணம்! அதிர்ச்சியில் கிராம மக்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மேற்கு ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளம் அருகே இன்று காலை சிலர் சென்றுள்ளனர் அப்போது அங்கு 40வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தண்டவாளத்தில் கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.அப்போது தண்டவாளத்தில் கிடப்பவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்பது தெரியவந்தது.

மேலும் போலீசார் அருகில் சென்று பார்த்த பொழுது அங்கு பினமகா கிடந்தவரின் தலை முழுவதும் சிதைந்த நிலையில் அடையளாம் தெரியாதவாறு கிடந்தார்.மேலும் அங்கு கிடப்பவர் யார் என்பதனை அடையாளம் காண்பதில் போலீசார்க்கு சிக்கல் ஏற்பட்டது.இதனையடுத்து போலீசார் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைகக்கா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தண்டவாளத்தில் பிணமகா கிடந்தவர் யார் அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Previous article“ஆப்ரேஷன் மின்னல் வேட்டை” தமிழகத்தில் ஒரே நாளில் 133 ரவுடிகள் சிக்கினர்!
Next articleஉங்களுக்கு ஏதேனும் அரசு வழங்கும் மருந்து குறித்து புகாரா?? உடனடியாக இந்த எண்ணை அழையுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்!!