ஒரு கட்சி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக வாய்க்கு வந்தபடி நிறைய கதைகளை அள்ளி விடுவார்கள். அதில் பொதுவாக எல்லா கட்சியும் சொல்லும் முக்கிய தேர்தல் அறிக்கை நாங்க ஆட்சிக்கு வந்தால் முதலில் மதுக்கடைகளை முழுவதுமாக மூடிவிடுவோம் என்பது தான். இதை தமிழகத்தை ஆளும் திமுக கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் முக்கிய குறிக்கோளாக வெளிப்படுத்தி இருந்தனர்.
ஆனால் ஆட்சி வந்த பிறகு நடந்தது என்ன? எப்போவும் போல மதுக்கடைகள் செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. நாளுக்கு நாள் மதுவுக்கு அடிமையாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரிச்சுக்கிட்டே தான் இருக்கு. முன்பெல்லாம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மது அருந்தும் பழக்கம் குறைந்த அளவிலே இருந்தது. ஆனால் இப்போது பெண்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என மது அருந்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது.
இந்நிலையில் மதுரை உயர்நீதி மன்றம் தமிழக அரசை டாஸ்மாக் விவகாரத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளது. ஆன்லைன் ரம்மி தடை செய்ய வேண்டும் என்று தமிழகஅரசு வழக்கு தொடர்ந்துள்ளது. ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஒரு நிலைப்பாடு , டாஸ்மாக் விவகாரத்தில் வேறு நிலைப்பாடு ஏன்? டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு நடத்துவதற்கான காரணம் என்ன? ஒருபுறம் மதுக்கடைகள் திறப்பு, மறுபுறம் குடிபோதை மறுவாழ்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு என தமிழக அரசை கேள்விக்கணைகளால் வறுத்தெடுத்துள்ளது மதுரை உயர்நீதி மன்றம்.