சாமி கழுத்திலிருந்த தாலியை திருடிய நபருக்கு 1 வருட சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவு

Photo of author

By Anand

சாமி கழுத்திலிருந்த தாலியை திருடிய நபருக்கு 1 வருட சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவு

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே திருட்டில் ஈடுபட்ட நபருக்கு 1 வருடம் சிறை தண்டனை விதித்து நாங்குனேரி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகேயுள்ள வேப்பங்குளம் மேலூர், வடக்கு தெருவை சேர்ந்த அப்பாத்துரை என்பவருக்கு சொந்தமான வன பேச்சியம்மன் கோவில் அதே பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் பூட்டை உடைத்து சாமிகளின் கழுத்தில் இருந்த தங்க பொட்டுத் தாலிகளை அடையாளம் தெரியாத நபர் திருடி சென்றுள்ளார்.

இதுகுறித்து அப்பாத்துரை ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு கோவிலில் சாமிகளின் கழுத்தில் இருந்த 1½ பவுன் பொட்டு தாலிகளை திருடி சென்ற வழக்கில் வேப்பன்குளம் மேலூர், அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆதிநாராயணன் என்பவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நாங்குநேரி குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று 30.03.2023- ம் தேதி இவ்வழக்கை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவர் சிதம்பரம் எதிரி ஆதிநாராயணனுக்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.