இதை அணிந்த காரணத்திற்காக சிறுமியை கொன்று தொங்கவிட்ட கொடூர தாத்தா!

Photo of author

By Hasini

இதை அணிந்த காரணத்திற்காக சிறுமியை கொன்று தொங்கவிட்ட கொடூர தாத்தா!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோ மாவட்டத்தில் தியாரியா எனும் இடத்தில் ஒரு கிராமத்தில் அமர்நாத் பஸ்வான் வசித்து வருகிறார். இவர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வேலை கிடைத்ததால் தனது மனைவி மற்றும் 17 வயது மகளுடன் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். சில நாட்கள் கழித்து அமர்நாத் பஸ்வான் மட்டும் லூதியானாவில் தங்கியிருந்து வேலை செய்துகொண்டு, மனைவி மற்றும் மகளை சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்துவிட்டார்.

சொந்த கிராமத்திற்கு வந்த சிறுமி ஜீன்ஸ் பேண்ட் அணிந்து இருக்கிறார். இதற்கு அவரது தாத்தா கடுமையான விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்தார். அது மட்டுமில்லாமல் சிறுமியின் உறவினர் அரவிந்த் மற்றும் அவரது மனைவி மற்றும் சகோதரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆனாலும் சிறுமி தனக்கு ஜீன்ஸ் பேன்ட் அணிவது தான் பிடிக்கும். எனவே நான் ஜீன்ஸ் பேண்ட் தான் அணிவேன் என்று சொல்லி அணிந்திருக்கிறார்.

இதனால் ஆத்திரம் கொண்ட உறவினர்கள் சிறுமியை சுவற்றில் பலமாக மோதி இருக்கிறார்கள். பின்னர் கடுமையாக தாக்கவும் செய்திருக்கிறார்கள். இதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின்னர் சிறுமியின் உடலை ஒரு ஆட்டோவில் எடுத்து போட்டுக்கொண்டு சென்றுள்ளார். அருகில் உள்ள ஒரு மேம்பாலத்திற்கு சென்றதும் ஆட்டோ டிரைவர் உதவியுடன் மேம்பாலத்தில் இருந்து சடலத்தை கீழே வீசி இருக்கிறார்.

ஆனால் சிறுமியின் உடல் கீழே விழாமல் மேம்பாலத்தில் சிறுமியின் கால்கள் சிக்கி தொங்கிக் கொண்டிருந்த நிலையில் உள்ளது. அந்த வழியாக சென்ற மக்கள் ஒரு சிறுமியின் சடலம் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி, தாத்தாவையும் அந்த ஆட்டோ டிரைவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சிறுமியை கொலை செய்த உறவினர்கள் தலைமறைவாகி விட்டதால், அவர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஜீன்ஸ் பேண்ட் அணிந்து ஒரு குற்றம் என்று அந்த சிறுமியை அடித்து கொலை செய்த உறவினர்களின் செயல் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.