‘என்ன சிம்ரன் இதெல்லாம்’?! மௌனராகம் சத்யா வெளியிட்ட விடியோவால் கடுப்பான ரசிகர்கள்!!

0
129

‘என்ன சிம்ரன் இதெல்லாம்’?! மௌனராகம் சத்யா வெளியிட்ட விடியோவால் கடுப்பான ரசிகர்கள்!!

ராட்சசன் படமானது நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகை அமலாபால் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்து வெற்றி பெற்ற படம் ஆகும். மேலும் குழந்தை நட்சத்திரங்களில் அம்மு மற்றும் ரவீனா தாஹா போன்றவர்கள் இந்த படத்திற்கு பின்பு மிகவும் பிரபலமாகி இருக்கின்றனர்.

இதில் ரவீனா தாஹா நடித்த சிறு கதாபாத்திரத்தின் மூலமாக தற்போது பிரபல தொலைக்காட்சி சீரியல் மௌனராகம் இரண்டில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். மேலும், மௌனராகம் சீரியலில் இவர் கார்த்திக்குக்கு மகளாக நடித்து இருக்கிறார். மேலும் சிறுவயதில் இவர்கள் பிரிந்த நிலையில், இவரது தாய்க்காக இவர் மீண்டும் சென்னைக்கு வந்தார்.

https://www.instagram.com/reel/CRbRiiYDtlE/?utm_source=ig_web_copy_link

சென்னை வந்த பின் பல பிரச்சனைகளுக்கு இவர்கள் ஆளாக்கப்பட்டனர். அதன் பின் தன் தந்தை தான் என்பதை அவர் கூறவில்லை. அதனை அடுத்து மல்லிகாவிற்கு ஆபரேஷன் செய்வதற்காக பண உதவி தேவைப் பட்டதால் இவர் வருண் என்பவரை திருமணம் செய்து, அவருடைய தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றினார்.

இதனை அடுத்து இருவருக்கும் திருமணம் நிகழும் போது அந்த மண்டபத்தில் கார்த்திக்கை மாப்பிள்ளையின் தந்தை மிகவும் அவமானப்படுத்தினார். அப்பொழுதும் அவர் அமைதியாகவே இருந்தார். ஆனால் சத்யா மிகவும் கோபப்பட்டு கத்த ஆரம்பித்துவிட்டார். அதன்பின் சமாதானமாக திருமணம் நடந்து முடிந்தது.

இதனை தொடர்ந்து சமீபத்தில் திருமண கோலத்தில் கழுத்தில் தாலியுடன் புகைப்படங்களை இவர் வெளியிட்டிருந்தார். தற்போது சத்யாவுடைய துணை நடிகர், சக நடிகரான வருணுடன் வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதில் இது தேவையா என்று கிண்டலடித்து வருகின்றனர்.

author avatar
Jayachithra