குழந்தைக்கு சூடு வைத்த கொடூர தாய்: குடிபோதையில் நடந்த விபரீதம்!

0
211

குழந்தைக்கு சூடு வைத்த கொடூர தாய்: குடிபோதையில் நடந்த விபரீதம்!

சென்னையில் இரண்டரை வயது குழந்தைக்கு சூடு வைத்ததாக, தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

குழந்தைக்கு சூடு வைத்த கொடூர தாய்: குடிபோதையில் நடந்த விபரீதம்!

சென்னை அடையாறு பகுதியைச் சாஸ்திரி நகர் சேர்ந்தவர் பானு. இவருக்கும் விமல் ராஜ் என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு தற்போது இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பானு, விமல்ராஜை விட்டு பிரிந்து இரண்டாவதாக ஜெகன் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். நேற்று இரவு பானு, தனது தாயாருக்கு போன் செய்து குழந்தைக்கு உடம்பு சரியில்லை என கூறியுள்ளார். அவர் வந்து பார்த்த போது குழந்தையின் நெற்றியில்  சூடு பட்ட காயம், அது மட்டுமல்லாமல் குழந்தையின் உடலில் சிராய்ப்பு காயங்களும் இருந்தது. இதையடுத்து பானுவின் தாயார் குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் நல மருத்துவமனை சார்பில் இது தொடர்பாக சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். அதில் பானு மற்றும் அவரது இரண்டாவது கணவர் ஜெகன் இருவரும் குடிபோதையில் குழந்தையை அடித்ததும், சிகரெட்டால் சூடு வைத்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து பானு ,ஜெகன் இருவரையும் கைது செய்த போலீஸர் விசாரணை நடத்தி வருகின்றனர். தான் பெற்ற பிள்ளைக்கு குடி போதையில் சூடு வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதமிழகத்தில் 22 சதவீதம் வரை பேருந்து கட்டணம் குறைப்பு – மகிழ்ச்சியில் பொதுமக்கள் 
Next articleபரவும் சோவா வைரஸ்:! போன் வைத்திருப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கையை விடுதிருக்கும் வங்கிகள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here