தற்போதய புதுவரவு இந்த வைரஸ்தான்! கர்ப்பிணி உட்பட கேரளாவில் 15 பேரை தாக்கியது!

0
118
The current newcomer is this virus! 15 attacked in Kerala including pregnant!
The current newcomer is this virus! 15 attacked in Kerala including pregnant!

தற்போதய புதுவரவு இந்த வைரஸ்தான்! கர்ப்பிணி உட்பட கேரளாவில் 15 பேரை தாக்கியது!

வடிவேலு பாணியில் வந்துட்டான்யா வந்துட்டான் என்பாதை போல வௌவால்களில் இருந்து கொரோனா வந்ததையே இன்னும் நம்மால் ஈடுகட்டி வெளியேற முடியாமல் தத்தளித்துக் கொண்டு உள்ளோம். இந்நிலையில், கொசுக்களினால் பரவும் ஜிகா வைரஸ் புதுவரவாக பரவி வருவதாக வந்த தகவல்களினால், மக்கள் மீண்டும் பயத்தில் உலவும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

கேரளாவில் கடந்த மாதம் கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழக கேரள எல்லையான செறுவார கோணம் பகுதியைச் சேர்ந்த 24 வயதான கர்ப்பிணிக்கு, காய்ச்சல் மற்றும் தலைவலி, அது இல்லாமல் தோலில் தடிப்புகள் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மேற்கொண்ட  பரிசோதனையில் அவருக்கு கொசுக்கள் மூலம் பரவும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், மேலும் சிலரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்ட போது அவர்களில் 14 பேருக்கு அந்த பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளில் கேரள சுகாதாரத் துறை தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. தமிழக-கேரள செறுவார கோணம் எல்லை பகுதியில் முப்பதுக்கும் மேற்பட்டவர்களிடம் ரத்த மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் இந்த வைரஸ் குமரி மாவட்டத்தில் பரவாமல் தடுக்க தமிழக சுகாதாரத்துறை சார்பில் எல்லைப்பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் வலுவடைந்து உள்ளதாக சொல்லப்படுகிறது. ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுவலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும் என்று அதன் அறிகுறிகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் இந்த வைரஸ் மஞ்சள் காமாலை மற்றும்  டெங்கு காய்ச்சலும் பரவுகிறது. இது தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு பரவினால் அவர் மூலம் வயிற்றில் உள்ள சிசுவும் பாதிக்கப்பட்டு உடல் நலக்குறைவு ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் குறைப்பிரசவம் மற்றும்  கருச்சிதைவு ஏற்படலாம் எனவும் எச்சரிக்கின்றனர்.

மேலும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நபருடன் உடல்ரீதியான உறவு வைத்துக் கொண்டாலும், இந்த வைரஸ் பரவும் ஆபத்து உள்ளதாக கூறியுள்ளனர். ஜிகா வைரசின் பாதிப்பு 3 முதல் 14 நாட்கள் வரை உடலில் தங்கி இருக்கும். இந்த பாதிப்பு ஏற்பட்ட 2 முதல் 7 வது நாளில் இதன் அறிகுறிகள் காணப்படும் எனவும்  இதுவரை இந்த வைரசுக்கு எந்த தடுப்பூசியும் கண்டு பிடிக்கவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleபாலிவுட் நடிகை செய்த ட்வீட்!! இனி எல்லாரும் சைக்கிள் தான் ஓட்டனும்!!
Next articleதேர்தலில் வன்முறை வெடித்தது! பெண் வேட்பாளருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!