தேர்தலில் வன்முறை வெடித்தது! பெண் வேட்பாளருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

0
86
Violence erupts in elections! The plight of the female candidate!
Violence erupts in elections! The plight of the female candidate!

தேர்தலில் வன்முறை வெடித்தது! பெண் வேட்பாளருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

உத்திரப்பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று மனுத்தாக்கல் செய்து 825 தொகுதி உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு 12க்கும் மேற்பட்ட இடங்களில் மோதல்கள் ஏற்பட்டது என தகவல்கள் வெளியாகின.

லக்னோவில் இருந்து 130 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லக்கிம்பூர் கெரியில் நடந்த மோதலில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த இந்த பெண்ணொருவர் மானபங்கப்படுத்தப்பட்டு உள்ளார். அந்தப் பெண் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது அவரை மற்றொரு கட்சி வேட்பாளர் மற்றும் அவரது ஆட்களால் தாக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வந்தது.

மேலும் அவர்கள் அந்த பெண்ணை சரியான நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமலும், அந்த பெண்ணின் சேலையையும் உருவி உள்ளனர். இதுகுறித்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள ட்விட்டரில், தாக்கியவர்கள் பாஜக தொண்டர்கள் என்றும், யோகி ஆதித்யநாத்தின் பதவி ஆசை கொண்ட குண்டர்கள் எனவும் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ராவும் வன்முறை வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு டேக் செய்து, பிரதமர் மற்றும் முதல்-மந்திரி வெடிகுண்டுகள், கற்கள் மற்றும் தோட்டாக்களை பயன்படுத்திய உ.பி.யில் உள்ள உங்கள் தொண்டர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்கள் வேட்புமனுக்களை பறித்து பத்திரிகையாளர்களை அடித்து, பெண்களுடன் தவறாக நடந்து கொண்டார்கள். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு ஜனநாயகம் சீர்குலைந்து வருகிறது என்று ஹிந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

இது குறித்து உத்தர பிரதேச போலீஸ் அதிகாரி பிரசாந்த் குமார் கூறும்போது, வேட்புமனு தாக்கல் செய்ய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் 14 பகுதிகளிலிருந்து மட்டும் வன்முறைகள் பதிவாகியுள்ளன என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். அடுத்த ஆண்டு உத்திர பிரதேசத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.

நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தலில் பாஜக 75 இடங்களில் 67 இடங்களை வென்றது சமாஜ்வாதி கட்சி 5 இடங்களில் மட்டுமே வென்றது. ராஷ்டீரிய லோக் தளம், ஜான்சத்தா தளம் மற்றும் ஒரு சுயேச்சை  வேட்பாளர் தலா ஒரு இடத்தை வென்றனர். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (பகுஜன் சமாஜ் கட்சி) தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் தெரிவித்தார்.