டவுன் பஸ்ஸில் ஆபத்தான தொங்கல் பயணம் முடிவுக்கு வருகிறது!! போக்குவரத்து கழகம் அதிரடி!!

Photo of author

By Divya

டவுன் பஸ்ஸில் ஆபத்தான தொங்கல் பயணம் முடிவுக்கு வருகிறது!! போக்குவரத்து கழகம் அதிரடி!!

தமிழகத்தில் பேருந்து போக்குவரத்தால் பள்ளி,கல்லூரி மாணவர்கள்,அலுவலகம் செல்வோர் என்று அனைவரும் பயனடைந்து வருகின்றனர்.இந்த போக்குவரத்துக் கழகம் தமிழகத்தின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக உள்ளது.

இதில் தலைநகர் சென்னையில் உள்ள மாநகர பேருந்து போக்குவரத்து சேவை பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருக்கிறது.சென்னை மாநகராட்சி மற்றும் அண்டை மாவட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் மாநகர பேருந்து சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

பஸ் பாஸ் மூலம் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு இலவச பயணம்,மகளிருக்கு இலவச பயணம் போன்ற காரணங்களால் மாநகர பேருந்தில் வார நாட்களில் கூட்டம் நிரம்பி வழிவது வழக்கமாக உள்ளது.

இதனால் பேருந்து படியில் நின்று பயணம் செய்யும் நிலைக்கு சிலர் தள்ளப்பட்டு விடுகின்றனர்.அதேபோல் ரூட் தல என்ற பெயரில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் பேருந்து படியில் தொங்கிய படி அட்டகாசம் செய்வதும் இதனால் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

சமீபத்தில் சென்னை திருமங்கலம் பகுதியில் படியில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் செய்த சிறுவன் பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.இவ்வாறு உயிருக்கு ஆபத்தான பேருந்து படிக்கட்டு பயணத்தை கட்டுப்படுத்த மாநகர போக்குவரத்து துறை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.தானியங்கு கதவுகள் இல்லாததே இவ்வாறான விபத்துகளுக்கு காரணம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது தலைநகர் சென்னையில் 448 பேருந்துகளுக்கு தானியங்கு கதவு பொறுத்தியுள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.