ஊரகத் திறனாய்வு தேர்வு தேதியானது அரையாண்டுத் தேர்வின் தேதியோடு ஒன்றியுள்ளது.. வருத்தத்துடன் கோரிக்கை வைத்த மாணவர்கள்!! அரசு எடுத்த நடவடிக்கை!!

Photo of author

By Gayathri

ஊரகத் திறனாய்வு தேர்வு தேதியானது அரையாண்டுத் தேர்வின் தேதியோடு ஒன்றியுள்ளது.. வருத்தத்துடன் கோரிக்கை வைத்த மாணவர்கள்!! அரசு எடுத்த நடவடிக்கை!!

Gayathri

The date of rural assessment examination is same as the date of half-yearly examination. Action taken by the government!!

தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வானது டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், டிசம்பர் 14ஆம் தேதி அன்று ஊரக திறனாய்வு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஒட்டன்சத்திரம் கிராமப்புறத்தில் உள்ள 9 ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு தேதியினை மாற்றி அமைக்கும் படி வலியுறுத்தியுள்ளனர்.

மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி முதல் வாரத்தில் தேர்வு நடத்தப்பட்டால் கிராம மாணவர்கள் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனோடு மேலும் சில கோரிக்கைகளையும் வலியுறுத்தியுள்ளனர். அவை பின்வருமாறு :-

✓ பல ஆண்டுகளாக ஆண்டுக்கு ரூ.1000 தான் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனை மாதம் ரூ.1000 ஆக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

✓ இவை மட்டுமின்றி, மாவட்டத்திற்கு 100 பயனாளிகள் என்பதை ஆயிரமாக உயர்த்த வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கைகளுக்கு தமிழக அரசனது நல்ல முடிவினை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.