குடும்பத் தகராறில் மாமியாரை கொன்ற மருமகள்! துக்கம் தாங்காமல் தானும் தூக்கிட்டு தற்கொலை!

Photo of author

By CineDesk

குடும்பத் தகராறில் மாமியாரை கொன்ற மருமகள்! துக்கம் தாங்காமல் தானும் தூக்கிட்டு தற்கொலை!

CineDesk

The daughter-in-law who killed her mother-in-law in a family dispute! Unable to bear the grief, he hanged himself!

குடும்பத் தகராறில் மாமியாரை கொன்ற மருமகள்! துக்கம் தாங்காமல் தானும் தூக்கிட்டு தற்கொலை!

சேலம் மாவட்டம் எடப்பாடி குரும்பட்டி ஊராட்சி ஒன்றியம் தானாமூர்த்தியூரில் மெய்வெல் செல்வி, தம்பதியினர் இரண்டு மகன்கள் உடன் வசித்து வருகின்றனர். மேலும் அதே பகுதியில் மாமியார் தைலம்மாள் கணவனை இழந்து தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் மருமகள் மாமியார் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும்.

மருமகள் செல்விக்கும் அவருடைய மாமியாருக்கும் தண்ணீர் பிடிக்கும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல் இன்று காலை இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அருகில் இருந்த வீட்டிற்கு மாமியார் சென்று சிறிது நேரம் கழித்து கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தார். தினந்தோறும் இருவருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மருமகள் செல்விக்கு கோபம் தலைக்கு ஏறியது. அந்த சமயத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை.

அருகில் இருந்த மாமியார் வீட்டிற்கு சென்று கட்டில் உறங்கிக் கொண்டிருந்த மாமியாரை அங்கிருந்த கட்டையை எடுத்து கட்டையால் தாக்கினால். மாமியாரை கொடூரமாக தாக்கியதால் ரத்த வெள்ளத்தில் தைலம்மாள் உயிரிழந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மருமகள் செல்வி என்ன செய்வது என்று தெரியவில்லை. பின்னர் துக்கம் தாங்க முடியாமல் செல்வி தனது வீட்டிலேயே சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தகவல் அறிந்து வந்த  காவல் ஆய்வாளர் வெங்கடேஷ் பிரபு இரு சடலங்கையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் குடும்பத்த தவறினால் தகராறு மருமகள் மாமியாரை கட்டையால் அடி தாக்கி கொலை செய்துவிட்டு தானம் தூக்கிலிட்டு செய்து கொண்ட சம்பவம் குறித்து கொங்கணாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தார்களில் மருமகள் மாமியாரை கொலை செய்து தாக்கி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.