அமெரிக்கா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளும் நாட்கள் தொலைவில் இல்லை- முதல்வரின் அறிவிப்பு!

Photo of author

By Kowsalya

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு உறுதியாக உள்ளது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதனால் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்களுக்கு மூன்று கோடியும் வெள்ளி வென்றவர்களுக்கு இரண்டு கோடியும் வெண்கலம் வென்றவர்களுக்கு ஒரு கோடியும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் இன்று முதலமைச்சர் தொடங்கி வைத்தார் .

18000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் மீதி உள்ளவர்கள் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. போட்டியில் பங்கேற்கும் 6 விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகையாக தலா 5 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார் முதலமைச்சர்.

தொடர்ந்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பேசியதாவது” விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் அரசு மிகவும் உறுதியாக உள்ளது என தெரிவித்தார். அரசியலை விளையாட்டாக எடுத்துக் கொள்பவர்கள் நாட்டில் உள்ளனர். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் விளையாட்டை கூட விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது. விளையாட்டுப் போட்டிகளில் அணி ஒற்றுமை மிகவும் முக்கியமானது. வீரர்களுக்கு தனி திறமை இருந்தாலும் களத்தில் ஓரணியாக செயல்பட்டால்தான் வெற்றி காண முடியும். அதுவே வெற்றியின் சாத்தியம் என்றும் கூறியுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு அரசு பணியும் வழங்கப்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான கருவிகள், பயணச்சீட்டு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. மேலும் ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 7 தமிழக வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டிலேயே 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும், என அதிமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும். தொடர்ந்து ஊக்கம் அளித்தார் அமெரிக்கா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளும் நாட்கள் தொலைவில் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வீரர்களுக்கு உடல் திறனும் மனோதிடமும் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதேபோல் தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக் போட்டிக்கு சென்று வென்ற வீரர்களுக்கு பரிசு தொகையும் அறிவித்திருக்கிறார்.

ஒலிம்பிக் போட்டிக்கு சென்று தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் தங்கம் வென்றால் ரூ 3 கோடி, வெள்ளி வென்றால் ரூ 2 கோடி, வெண்கலம் வென்றால் ரூ 1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.