ஈரோடு மாவட்டத்தில் சாக்கடையில் மூழ்கிக் கிடந்த பெண் சடலம்! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!

Photo of author

By Parthipan K

ஈரோடு மாவட்டத்தில் சாக்கடையில் மூழ்கிக் கிடந்த பெண் சடலம்! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஆதி ரெட்டியூர் செல்லும் வழியில் ஏஎஸ்எம் காலனியில் பொது கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கழிப்பிடத்திற்கு எதிரில் சாக்கடை கால்வாயில் ஒன்று உள்ளது.   நேற்று மாலை சாக்கடை கால்வாயில்  ஒரு பெண் சடலமாக கிடப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அதன் அடிப்படையில் அப்பகுதி மக்கள்  அந்தியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்  பெயரில் அப்பகுதிக்கு வந்த அந்தியூர் போலீசார் சாக்கடையில் கால்வாயில் மூழ்கி கிடந்த  பெண் சடலத்தை  மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அந்த சாக்கடை கால்வாயில்  இறந்து கிடந்த பெண்ணிற்கு சுமார் 55 வயது இருக்கும் எனவும் எந்த ஊரை சேர்ந்தவர் என்று அடையாளம் தெரியாத காரணத்தால் போலீசார் அந்த பெண்ணின்  புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டும் என்றும்  பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்கள். மேலும் அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.