பிரிட்டன் இரண்டாம் எலிசபெத் ராணி மறைவு! அடுத்தடுத்து வரும் புதிய மாற்றங்கள்!
பிரிட்டன் ராணியாக எழுபது ஆண்டுகள் திகழ்ந்தவர் இரண்டாம் எலிசபெத் ஆவார். அவர் மறைவுக்கு பிறகு தற்போது பிரட்டனில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.அந்த மாற்றங்கள் காவல் நிலையத்தில் உள்ள கொடிகள் முதல் கடற்படை கப்பல்களில் உள்ள கொடிகள் வரை இரண்டாம் எலிசபெத் சின்னமான எலிசபெத் டூ ரெஜினா என அழைக்கப்படும் ராணியின் கொடிகள் உள்ளன.ராணியை தலைவராக ஏற்றுக்கொண்ட நாடுகளான ஆஸ்திரேலியா ,நியூசிலாந்து ,கன்னடா நாடுகளிலும் அவர் சின்னம் கொண்ட கொடிகள் உள்ளன.
மேலும் பிரிட்டன்னில் இராண்டாம் எலிசபெத் ராணியின் உருவ படங்கள் கொண்ட புழக்கத்தில் உள்ள ரூ 64 லட்சம் கோடி மதிப்பு கொண்ட நோட்டுகளை மாற்ற வேண்டும். அதனையடுத்து அங்கு பாடப்பட்டு வரும் தேசிய கீதத்தின் வரிகளை மாற்ற வேண்டும்.
அந்த தேசிய கீதத்தில் கருணையுள்ள ராணியை காப்பாற்றுங்கள் என்பதை கருணையுள்ள மன்னரை காப்பாற்றுங்கள் என மாற்ற வேண்டும்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி மன்னர் பெயரில் பதவியேற்க்க வேண்டும் .
ராணியை தலைவராக ஏற்றுக்கொண்ட 14 நாடுகளின் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.ராணியின் வாரிசை தலைவராக ஏற்பதாக திருத்தம் செய்ய வேண்டும். பிரிட்டனின் தலைவர் பாஸ்போர் இல்லாமல் எந்த நாட்டிற்கும் பயணம் செய்யலாம்.அவருக்கு வாகனம் ஓட்டுவதற்கு உரிமம் தேவையில்லை .பிரிட்டன் மன்னர் மக்களை மட்டும் ஆள்வதில்லை அங்குள்ள வாத்துக்கள் ,ஷாட் மீன் ,டால்பீன்கள் ,திமிங்கலங்கள் என அனைத்தும் மன்னருக்கே சொந்தம் எனவும் கூறப்படுகிறது.