ஈரான் அதிபர் உயிரிழப்பு.. எகிறும் பெட்ரோல் டீசல் விலை!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

Photo of author

By Rupa

ஈரான் அதிபர் உயிரிழப்பு.. எகிறும் பெட்ரோல் டீசல் விலை!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்ற போரானது உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தது. அதன் தாக்குதல் தற்பொழுது வரை முடியாமல் நீடித்த நிலையில் தான் உள்ளது. ஈரான் மற்றும் அஜர்பை ஜான் இரு நாடுகளும் இணைந்து ஒரு அணை ஒன்றை கட்டியுள்ளனர். இதனின் திறப்பு விழாவிற்கு ஈரான் அதிபர் இப்ராஹிம் சென்ற போது ஹெலிகாப்டரானது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஈரான் அதிபர் மற்றும் அவருடன் சென்ற அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹசைன், ஈரான் எல்லையில் உள்ள அஜர் பைஜான் மகான ஆளுநர் மற்றும் காவல் அதிகாரிகள் பல உயிரிழந்துள்ளனர்.

ஈரான் அதிபர் உயிரிழப்பு உறுதியாகி தகவல்கள் வெளியான நிலையில் இன்று புதிய அதிபராக முகமது முப்பர் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் இந்த பாதிப்பால் கச்சா எண்ணெய்யின் விலையானது வர்த்தக ரீதியாக அதிகரிக்க கூடும் என்று கூறுகின்றனர். கச்சா எண்ணெயின் ஏற்றுமதியில் முன்னணியாக இருக்கும் ஈரான் மற்றும் சவுதி அரேபியா இரு நாடுகளும் தற்பொழுது இக்கட்டான சூழலை சந்தித்து வருகிறது. சவுதி அரேபியாவின் அதிபர் முகமது பின் சல்மான் அவரின் தந்தை உடல் நலக்குறைவால் உள்ளார்.

இதனால் இவர் ஜப்பானுடன் கச்சா எண்ணெய் குறித்து ஆலோசனை செய்ய இருந்த பயணமானது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் இரு விளைவுகளும் கச்சா எண்ணெயின் விலையை கூட்ட செய்யும் என நிபுணர்கள் கூறுகின்றனர். தற்பொழுதே 80 டாலரை கடந்த நிலையில் கிட்டத்தட்ட 83 டாலர் வரை விலை தொடக்கூடும் என ஐஜி மார்க்கெட் கூறியுள்ளார். இதன் விளைவாக உலக நாடுகள் மத்தியில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரிக்க கூடும். அந்த வகையில் வரும் நாட்களில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது எதிர்பார்க்க முடியாத அளவிற்கு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.