கடைகளில் செய்யும் சுவையான கத்திரிக்காய் இட்லி சாம்பார் இனி நம் வீட்டிலேயே!…

0
336

கடைகளில் செய்யும் சுவையான கத்திரிக்காய் இட்லி சாம்பார் இனி நம் வீட்டிலேயே!…

 

முதலில் தேவையான பொருட்களை நாம் எடுத்துக் கொள்வோம்: தேவையான பொருள்கள்; கத்திரிக்காய் – கால் கிலோ, துவரம் பருப்பு – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – 3, கறிவேப்பிலை – 3 இலை, கடுகு – அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி, உப்பு – ஒரு தேக்கரண்டி, பெருங்காயம் – கால் தேக்கரண்டி, எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

 

 

வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்:செய்முறை ; துவரம் பருப்பினை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும். தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.கத்திரிக்காய், வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயினை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.குக்கரில் துவரம் பருப்பு, நறுக்கி வைத்திருக்கும் கத்திரிக்காய், வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு மற்றும் பச்சை மிளகாய் போடவும்.

இவை அனைத்துடனும் 4 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.குக்கரின் ப்ரஷர் அடங்கியதும் திறந்து ஒரு கரண்டியை வைத்து மசித்து விடவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

தாளித்தவற்றை வேக வைத்து மசித்து வைத்திருக்கும் காய்களுடன் போட்டு கிளறி விடவும்.சுவையான கத்திரிக்காய் இட்லி சாம்பார் ரெடி. இதனை இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். அதிகம் காரம் இல்லாததால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Previous articleஉங்களுக்கு கருப்பையில் நீர்கட்டிகள் இருக்கா?.. இதை மட்டும் சாப்பிட்டால் போதும்!!முற்றிலும் குணமாகிவிடும்…
Next articleமனச்சோர்வு உங்களுக்கு உள்ளதா! இதோ இதுதான் அதற்கான காரணம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here