வங்கக்கடலில் தற்பொழுது நிலவக்கூடிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கும் என்றும் இன்று அல்லது நாளை புதிய காற்றழுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் நேற்று முதல் பல இடங்களில் கன மற்றும் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியினால் இன்று மற்றும் நாளையும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
இதன் மூலம் டிசம்பர் 14ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த ஊரக திறனாய்வு தேர்வானது மழையின் காரணமாக மாணவர்களின் நலன் கருதி ஒத்திவைக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.மேலும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பு :-
தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு ஆனது டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 வரை நடைபெற இருக்கிறது என்று அட்டவணை வெளியிட்ட பொழுது, ஒட்டன்சத்திரம் கிராமபுரத்தில் உள்ள 9 ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு தேதியினை மாற்றி வைக்கும்படி கோரிக்கை வைத்திருந்தனர்.
இது குறித்த எந்த கோரிக்கையும் அரசு ஏற்றது போல் தெரியவில்லை. ஆனால் அவர்களின் கோரிக்கையின் பொழுது மாற்றி அமைக்கப்படாத ஊரக திறனாய்வு தேர்வின் தேவையானது தற்பொழுது மழையின் காரணமாக மாற்றி அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.